பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஆசியத்தின் பேரோசை மீர்ஸோ துர்கன் ஸாதே ஆசியத்தின் பேரோசை அகில உலகனைத்தும் வீசிப் பரந்துயர்ந்து விம்மி ஒலிக்கிறது ! மிடிமைத் துயர் தவிர்ந்த மேதினிக்காய், யாவருக்கும் அடிமைப் பிணி போக்கும் அருமருந்தாம் உயிர் மூச்சை வாரி வழங்குவதாய், வாக்குறுதி கூறுவதாய் பாருலகில் ஆசியத்தின் பேரொலியும் கேட்கிறது! ஆசியா விழிக்கிறது! அருணோ தயப்பொழுதின் தேசதனைப் பெருமையுடன் சேர்ந்து களிக்கிறது ! ஆகாயப் பறவையைப்போல் ஆசியத்தின் நல்லிதயம் வாகான விடுதலையின் வரவினிலே சிலிர்ப்புற்று, பரவசத்தால் தன்னுள்ளே படபடத்துத் துடிதுடித்துப் பெருமகிழ்ச்சி யுட்கலந்து பேரின்பம் காண்கிறது ! நம்முடைய பேரணியோ நலியாது ஒழியாது செம்மாந்து செல்கிறது! சேர்ந்துற்ற நாமெல்லாம் , சிந்தையிலே பயமிழந்து செயலினிலே சோர்விழந்து பந்தமுற்றுச் சுதந்திரத்தைப் பக்தியோடு போற்றுதற்கும் முந்துற்றோம்! நட்புறவில் முந்துமொரு திருக்கரத்தைச் சிந்தைக் களிப்புடனே சேர்த்துப் பிடித்திட்டோம் ! நமைப்பிணைத்த விலங்குகளை நாமுடைத்தோம்! பல்லாண்டாய்க் குமைந்திருந்த வாழ்விருளைக் குலைத்தோம் ! கலைத்திட்டோம் ! கற்பனையில் கனவுதனில் காலமெல்லாம் காணாத . அற்புதம்போல் நமைச்சூழ்ந்து அரியதொரு புதியதொரு வாழ்வும் செழித்தோங்கி வளர்ந்து மலர்கிறது ! சூழ்வினையால் நாடுகளைத் துண்டாடி, தொன்றுதொட்டு