பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கவிஞனுக்கு .... மிர்ஸோ துர்சுன் 'ஸாதே கவிஞனே! நீநெருப்பாய்க் கனன்றெரிக ! அவ்வாறு கனல்கின்ற நெருப்பாலே காந்தியொளிர் ஏடுகளில் கவிதையினை ஏற்றிடுக! கண்டாயா இவ்உருக்கை? கனற்பிழம்பிற் புடம்போட்டுக் கரையேறி வந்ததிது! வருங்காலம் தன்வடிவ வரம்புக்குள் காண்பதெலாம் வளர்ந்தோங்கும் செந்நிறத்து வண்ணப் ', பதாகைகள் தான்! இரவிக்கும் கவிஞனுக்கும் என்றைக்கும் ஓர் தொழிலே : - இருவருமே படைத்தாக்கி ஈவதுதான் யாதெனிலோ கதிரொளியும், ஒளிவழங்கும் கதகதப்பும் தாமன்றோ ? கதகதப்பு குடி போனால் வீடும் ஒரு கல்லறைதான்.! கதக தக்கும் நல்லன்பைக் காணாது போமிடத்தில் "கதிர் பரப்பும் திருவிளக்கின் சுடர்மட்டும் கண்டிடுமோ? . கதகதப்பை இதயத்தில் காண வில்லை எனில் அதுவும் - கலகலப்பை அறியாத் கல்லேதான். ! ஐயமில்லை! கதகதப்பைப் பாட்டொன்றில் கண்டறியோம் எனிலந்தக் கவியினிலே அன்பினை நாம் காணுதற்கும் ஏலாது! கதகதப்பு இல்லையெனில் காவனத்து, மலர்க்குலமும் கவினோடு மலர்வதில்லை! கனன்றெரியும் உத்வேகக், கதகதப்பு மாண்டுபடின், கழறுகின்ற வாய்மொழியும் கண்மூடும் ; செத்தொழியும்! கதகதப்பை இழந்திட்டால், குலுங்கச் சிரித்தாலும் குதூகலத்தில் உணர்ச்சி குடி கொண்டிருக்கக் காண்பதிலை ! குழந்தையில்லாத். தொட்டிலினை அலுங்காமல் ஆட்டிவிடும் கதைபோலே அதுவாகும்! ஆதலினால் கவிஞனே நீ ! ஆர்வமொடு கனன்றெரிக! ' . நீயே நெருப்பாகி. நின்றெரிந்தால் வருங்காலம் நின்விருப்பம் போலாங்கே நிச்சயமாய் உருவாகும் ! காய்ந்திட்ட நல்லுருக்கு, காதல், கவிதையெலாம் "காரியத்தில் ஓரியல்பே கொண்டிருக்கக் கண்டிடுவாய்1 ,