பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிடினும், சுதந்திரத்தின் அணையாப் பெருஞ்சோதி அதற்கேற்ப வளர்வதுவும் அவசியம் தான் என்றறிவாய்! கவிஞனே! நின்னிதயம் காளவாய்த் தீப்போன்று கனற்பிழம்பின் ஓளிசிதறிக் கனலட்டும் ! கனன்றக்கால், புவிமனிதர் இதயமெலாம் புத்துணர்வும் புத்தொளியும் - பொலிந்தாங்கே விழித்தெழுந்து புதுமைபல தானியற்றும்! தீக்கதிரைப் போலுனது திருவாக்கு பிறக்கட்டும் ! திருவாக்கில் தீப்பொறிகள் தெறித்தாங்கே சிதறட்டும்!" வாக்கினிலே கற்களெலாம் உயிர்பெற்று வாழட்டும்! வாழ்வுற்ற கல்லெல்லாம் வாய்திறந்து கத்தட்டும்! கவிஞனே ! உனக்குற்ற கலமதோ மிகக்குறைவு ; காலத்தில் உன் பங்கு கரைந்து மறைவதற்குள் அவித்தீயாய்க் கனன்றெரிக! ஏனென்றால் அனல்பிறக்கும் ஆசையின்றி இவ்வுலகில் அன்பெதுவும் வாழ்வதில்லை !