பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. எனக்கோ பழம் நாட்கள் எல்லாம் மறந்தவைதான்! யாரோசாவ் ஸ்மெல்யாகோவ் எனக்கோ பழம் நாட்கள் எல்லாம் மறந்தவைதான் ! உனக்கோ ஓடிவிட்ட ஆண்டுகளில் ஒன்றேனும், என்கா தல் நித்தநித்தம் ஏற்றிவைத்த சுமையதனை, என்னுளத்தி னுற்றதுயர் ஈந்துவந்த பாரத்தைச் சிறிதும் குறைத்ததிலை. அந்நாளில் சித்திரப்பூச் சரிகையிட்ட, செவ்வாடை தரித்தவளாய், ஆங்கே நீ கருவம் நிமிர்ந்தோங்கும் கட்டழகுக் கொடி போன்ற உருவத்தோ டென்னெதிரே உல்லாசமாய் நடந்தாய் ! அந்நேரம் உன் வருகை அகன்வான மண்டலத்தை மின்னல் கிழிப்பதுபோல், வெட்டியதோர் மின்னொளியும் காலமழைத் தாரைகளுக் கப்பாலே பளபளத்தாற் போலிருக்கக் கண்டேன் நான்! அத்தகைய பொழுதில் நீ உன்னுடைய கொடியிடையில் ஒருகையை மெலத்தாங்கி, தன்னிலையில் தா ழ!T த தலைநிமிர்ந்து நடந்திட்டாய் ! அவ்வளவில் நானுன்னைக் கண்டறிந்த அதிசயம்தான் எவ்வளவு புதியதடி ! எவ்வளவு புனிதமடி ! ஆயிடினும் நானோ அவமானப் பட்டுவிட்டேன் ! போயொழிந்த ஆண்டுகளில் உன்னருகே போந்திருத்தும் சிந்தைச் சிறுபயத்தால், சில்லறைக் கவலைகளால் மந்தமுற்றுப் போன என் றன் மனமோ, வெகுதொலைவில் போயிருக்க நேர்ந்ததம்மா! அத்தகைய பொழுதினிலே நீயிருந்த நிலை காணும் நினைப்பிழந்து போய்விட்டேன் ! என்னருகில் இன்றில்லா என்னழகே ! என்னன்பே! சன்னக் குரலெடுத்துச் சத்தமிட்டுக் கூவுகின்ற சின்னச் சேவலென ஏதேதோ செப்புகின்ற . என்னை, நான் விரும்பி இழைக்காத. இப்பிழையை, முன்னனு மதியின்றி மொழிகின்ற இப்பாட்டை மன்னித் தருள்கவென மன்றாடிக் கேட்கின்றேன்! 53