பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்டிக் பிரதேசத்தில் வெண்கடலுக்கு வடக்கே அமைந்துள்ளது கோலா தீப கற்பம். பனி அதிகமான இந்தப் பிரதேசம் புரட்சிக்கு முன்னால் வெறும் பாழ் நிலமாகத்தான் இருந்தது. அங்கு எண்ணாயிரம் மக்கள் கூட வாழவில்லை ; வாழ்ந்து வந்தவர் களிலும் பெரும்பாலோர் ஜார் அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டு, பனிப் பிரதேசத்தில் பரதேச வாழ்வு வாழ்ந்தவர்கள் தான், புரட்சிக்குப்பின்னர், இதே தீபகற்பத்தில் பல்வேறு கனிப்பொருள்கள் கண்டறியப்பட்டு, அதன் விளைவாகப் பல தொழிற்சாலைகளும், கனிச் சுரங்கங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. புதிய நிர்மாணத் திட்டங்கள் அங்கு நிறை வேற்றப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் இளம் பத்திரிகை நிருபராகப் பணியாற்றுகிறார் ஓலெக் த்மித்ரியேவ். அத்துடன் அவர் சிறந்த இளங்கவிஞராகவும் திகழ்கிறார். 23. முதியவர்கள் ஓலெக் திமித்ரியேல் நாளுக்கு நாளாக நானும் பெரியவனாய் ஆளாகி, விறைப்புற்றும் முறைப்புற்றும் அமைகின்றேன்....... வாகாய் முன்வளைந்த தோள்கொண்ட வயோதிகரும்

  • கோகோல் சாலையிலே குறுகுறுக்கும் புறாக்களுக்குத்

தீனியினைப் போடுகின்றார். திறந்திருக்கும் அவர்கரத்தின் தானியத்தைக் கொத்தவரும் புறாக்களுமே. தம் சிறகால் முதியவரின் மார் பருகே மோதுவதும், குறுகுறுத்துக் குதிப்பதுமாய்த் தானிருக்க, குறிபேதும் வேறின்றி முதியரவர் புறாக்களையே முனைப்பாகப் பார்த்தவராய் இதயம் இழந்திருந்தார். எம்மருமைத் தாயர்களும் தந்தையரும் இளையவராய்த் தானிருந்த காலத்தே

  • கோகோல் :'( (நிக்கோ லாய்ட் கோகோல் -1809-185.2) - ருஷ் யக் கவிஞர்;

சிறந்த அங்கதக் கவி). 54"