பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தமது முகங்களிலே தடம் வகுத்துப் பதிந்து, தமை நொந்துபடச் செய்தால் நொம்பலமும் கண்டிருந்தார், கொந்தும் அடியுதையும், குடிபெயர்ந்து பிரஷ்டரெனச் செல்லும் கொடுமைகளும் திரைமறைவில் காத்திருக்க, துயிலிழந்தும், பசியழன்றும், துன்பங்கள் பட்டவராய் அயிர்த்திருந்தார் ! நூற்றாண்டின் அவதிபல சுமந்தலுத்துக் களைத்திருந்த வேளையிலும், கண்முன்னே ஒருமரம்தான். தழைத்துவரக் கண்டக்கால், வசந்தத்தின் தண்மலர் கள் பூதத்தொளிர்ந்தால், புல்லிதழும் புன்னகைத்தா ல், சூரியனும் தீத்தவழ உதித்தக்கால், நீவிரெலாம் திருமுகத்தில் குதூகலமே பொங்கிவரக் குறு நகையே புரிகின்றீர் ! முதியவரே! அன்பான மூத்தவரே! குளிரிலந்தைப் பழச்செடியின் அருகே நீர் பணிந்தே குனிகின்றீர் ! முளைத்தெழுந்த நாணலினை முறித்ததனில் குழல் செய்தீர் ! இளந்தவளைக் குஞ்சொன்றை எடுத்தேகி, அக்குஞ்சைக் குளத்தினிலே மீளவிட்டுக் குதூகலமே கொள்கின்றீர் !... புடம்போடும் காலமெனும் சோதனையில் பொன்றாது இடம்பெற்ற கருத்துகளை, இரும்பொத்த பெருந்துணிவை உம்மிடத் தேயிருந்து உரிமையென யாம்பெற்றுச் செம்மாந்தோம் என்றாலும் எல்லாம் தெரிந்தவர் போல் இள நகையே யாம்புரிந்து இரண்டாம் முறை வருமோர் குழந்தைப் பருவம் என உமைநோக்கிக் கூறுகின்றோம்!... இப்போதோ, முதுமையினை எய்திவிட்ட இவரெல்லாம் தப்பாதே வாழ்க்கையெனும் தணலுலையில் புடம்போட்டு உருக்காகி, பொற்கால வாழ்க்கைக்கும் உரித்தாகி - இருக்கின்ற உண்மையினை, எங்களது நல்லுலகில் பொற்காலம் வந்துதித்த புதுமையினை, ஓர் நொடியில் அற்புதம்போல் நினைவூட்டி அறிவுறுத்தக் காண்கின்றோம்!