பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ..... ஊகியுங்கள்! ஓல்ழாஸ் சுலெய்மெனோவ் (காஜக்ஸ்தான் கவிஞர்) வானோக்கி மேலேற மானிடர்கள் விரும்புவதேன் ? வான்பருந்து பறவைகளை வாழ்த்துவதேன்? வையகத்தில் மானிடர்கள் படைத்தளிக்கும் அழக தனை “மகோந்நதமாய்' 'வான்ஐடயர் ந்த' என்றுபல வார்த்தைகளால் வழங்குவதேன்?... ஆறுபல் வழிந்தோடும் ; அணிவயலுக் கமுதூட்டும் ; ஆற்றங் கரையருகே அழகு நகர் பலதோன்றும் ; நீரோடும் ஆறுகளின் நீல ரத்த நாளங்கள் நெருங்கிச் சூழ்ந்திருக்க, நிலமகளின் பேரிதயம் பறந்து 'சிறந்தோங்கும் ! நேற்றைப் பழம்நாளின் பனிபடிந்த தாரகைகள் மண்டலத்துப் பாதையினை அறிந்துகொளல் சிரமம்தான். ஆனாலும் உன்னுடைய அரும் இதயம் தனை வாட்டும் அகிலத்தின் பாதையினைக் கண்டறிதல் மிகப்பெரிய கஷ்டம்தான். ஆற்றினைப்போல் காலமெல்லாம் அப்பாதை காடுமலை பலகடந்தும், உண்டான பல்நகரைஒன்றோடொன் றிணைசேர்த்தும், ஊடறுத்துப் பாய்கின்ற ஒளிக்கதிர்போல் இருளதனை ஓடவிட்டும் பழங்கால உலகையெலாம் உன்னருகே ஒருநொடியில் கொண்டுதரும் ' உன்னிதயப் பாதையதே நீடுயர்ந்த தாரகையை நின்னருகே கொண்டுவரும் ! நிகழ்ச்சியிது. சிரமம்தான் !. என்றாலும் நீயந்த' ' '. வழியதனைக் கண்டறிந்தே வரவேண்டும்! ஏனென்றால் வையகத்தைச் சாருமந்த வழியேதான் வானுலகின் ஒளிமலிந்த இந்நாளின் உடுக்குலத்தை எய்திடுமோர் உன்னதமாம் பாதைக்கும் உற்றவழி காட்டிடுமாம்.! :