பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஓடும் ரயிலில் உல்லாச கீதம் ஆந்திரே வோஜ் நெலன்ஸ்கி தடிச் செல்லும் ரயில் வண்டி !-அதில்

  • அக்கார்டியன்கள் ஒரு நான்கு

கூடிக் கலந்து இசைபொழியும் !-மழை கொட்டும் வெளியே ஜன்னலிலே ! மழையொரு பக்கம் பெய்தாலும் ---அந்த வாத்திய கீதம் ஓயவில்லை ! இளைஞர் நால்வர், மாணவர்கள் ; - அவர் இன்னிசை கீதம் இசைத்தார்கள் ! படிப்புக் காலம். முடிந்தாச்சு! --- இனிப் பலப்பல ஊரும் சுற்றிவர விடுமுறை நாளும் வந்தாச்சு -அதை விமரிசையாக்க முனைந்தாச்சு! ஆகா ! அடடா! எதிர்ப்புறத்தில்--அந்த ஆசனந் தன்னில் இருப்பவளார் ? வாகாய் அமைந்த வடிவழகி! -அந்த வாலைக்குமரி யார், அவள் யார் ? ஓடும் ஓடும், ரயிலோடும்!- அதில் உல்லாசம் துள்ளிக் குதிபோடும்! பாடும் பாடும், இசை பாடும் - அங்கு பரவச வெள்ளம் துள்ளாடும் ! வாராய் பெண்ணே ! வடிவழகி ! - இந்த வாத்தியக் காரர் நால்வரில் நீ ஆராக் காதல் கொள்பவன் யார் ?-அந்த அதிட்டம் பெற்றவன் எங்களில் யார் ? - * அக்கார்டியன் : ஆர்மேனியம் போன்றதொரு துருத்தி வாத்தியம் .