பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பழைய எழுத்துப் பிரதி ராசுல் ராஜா (அஜெர்பெய்ஜான் கவிஞர்) பின்னிப் பிணைத்து நடம் புரிகின்ற பின்னல்வலை 6Tன்ன அமைந்திருக்கும் எழுத்தின் பல்வரிகள்; காலத்துக் காற்சுவட்டின் கறைபட்டுச் சீர்குலைந்த மூலை விளிம்பினொடு மென்மையிலும் மென்மையதாய் மக்கி நிறம்மாறி வருகின்ற மஞ்சட்தாள் பக்கங்கள் மீதினிலே பலப்பலவாம் எழுத்துக்கள் மூச்சுவிட்டால் பொடிப்பொடியாய் முறிந்துவிடும் என்றெவரும் மூச்சடக்க வைக்கின்ற மொறுமொறுத்த: பழந்தாள்கள்! ஆனாலும் கல்லையுமே மிஞ்சுகின்ற அதிவலிமை தானமைந்த தாள்களவை; முடிவதனைத் தானறியாப் பற்பலவாய் ஆண்டுகளின் பாதையிலே அவையெற்ற அற்புதமாம் நம்பிக்கை, ஆனந்தம் வேதனைகள் எல்லாமும் பயறு 6வற்றினிலே ஏறிச் சுமந்திருக்கும்! பொல்லாத மாமாயம் புரிகின்ற பக்கங்காள்! நீங்கள் சிரிக்கவைப்பீர்! நெக்குருகி அழவைப்பீர்! நீங்கிவிட்ட காலமது நெட்டுயிர்க்கும் குரல் தனை உங்கள் குரலதனில் உன்னிப்பாய்க் கேட்கின்றேன். உங்கள் குரல்துவோ, ஒருநாளும் அழியாத, மானிடனின். என்றென்றும் மறையாத மனவேகம் தர னதனை எடுத்தெனக்குத் தவறாது வழங்கிடுமே!