பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஷ்ய நாட்டில் கிழக்கு சைபீரியப் பகுதியில் யாக்குட், சோவியத் சோஷியலிஸ்ட் குடியரசு உள்ளது. புரட்சிக்கு முன்னர் இந்தப் பகுதி மக்கள் எழுத்து வாசனையே அறியாதவர்கள். அவர்கள் பேசிய மொழிக்கு வரிவடிவம் கூட அப்போதில்லை, அந்தக் குடியரசில் உள்ள ஒரு சிறு தேசிய இனம் எவங்க் இனமாகும். இந்தத் தேசிய இனத்தின் மொழியைப் பேசும் மக்கள் இப் போது எழுத்தறிவைப் பெற்றதோடு மட்டுமல்லா மல் இலக்கியமும் படைக்குமளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அதற்கு இந்தச் சிறந்த கவி தையே நல்ல எடுத்துக் காட்டு. 27. என் நாடு அலிதெத் நெய்துஷ்கின் (எவங்க் கவிஞர்) என்னருமை மக்களர் தம் இன்மொழியை, கண்களில் நீர் எழும்பிவரச் செய்யுமவர் இனிய பல பாடல்களை என்றேனும் நான் மறந்தால், என் உதடும், என்செவியும் என்கண்ணும் இருப்பதற்கே ஏதுபயன்? ஏதுபயன்?... என்னருமைத் திருநாட்டின் இன் மணத்தை நான் மறந்தால் என்னாட்டின் ஆணைகளை யானே புறக்கணித்தால் பின்னரென்றன் வாழ்க்கையிலே பெறும்பயனும், - யாதுகொலோ? பின்னரென்றன் வேலையற்ற கைகளுமே பயன்பெறுமோ?... என்னிருகால் அடியினிலே பனித்துளிகள் மலர்ந்திருக்க, எங்கிருந்தோ: (சோகமயத் தாலாட்டை. இளங்காற்றும் இன்னிசைக்க, பைன் மரத்தின் எட்டாத சிகரமெலாம் எல்லையற்ற நிர்மலவான் மண்டலத்தை எட்டிவிட...