பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' க்யூபா நாட்டுக்குச் சென்று வந்த கவிஞர் அந் நாட்டில் தாம் கண்ட ஒரு வீராங்கனையைப் பற்றிப் பாடிய பாடல் இது. 28. எழிலரசி -- -- --- யெவ்ஜெனி யெவ்துஷெங்கோ வீதியெலாம் பெருங்கூட்டம்; வீடுகளில் யாருமில்லை; வெறிகொண்ட களியாட்டு விளையாடும் காட்சியது. ஏதெனிலோ சாந்தியாகோ எழிலரசி இவளென்று இன்றிரவில் அவரெல்லாம் தேர்ந்தெடுக்க இருந்தார்கள். ஜாலர்வலைப் பின்னல்பல தானாடும் பட்டுடைகள் தரித்த இளம் நங்கையர்கள் சங்கீதத்துக் கேற்றபடி . வாலைப்பே ரெழிலரசி மணிமுடிக்குப் போட்டியிட்டு நகரத்து வீதியிலே நடனமிட்டுச் சுழன்றாடி, ' நடைபோட்டுப் படைபோலே வருமழகை நான் கண்டேன். தந்த நிறம், தங்க நிறம், தளிர் நிறமும் கலந்தழகு கொழிக்கின்ற அங்கங்கள்! கோலவெழில் வதனங்கள்! ' குமரியர்கள் இவர்களிலே ராணியெனக் கொளப்பெறுமோர் எழிலரசி அவள் யாரோ? இருண்ட்வெழிற் கூந்தலோடு இருள் நிறத்து நவீன ஸென இருப்பவளோ? இல்லையெனில், குறுகுறுத்துச் சிமிட்டுகின்ற இள நீர்க் குறுவிழிகள் : கொண்டிருக்கும் குறும்புமிகு குட்டிப்பெண் அவள் ' தானோ !... வருமவரில் ஒவ்வொருத்தி வடிவழகும் என்னுளத்தை மயக்கிடினும் எழிலரசி என்றே நான் மதிப்பவளோ, இன்னொருத்தி யேயாவாள்! இந்தவொரு அணிவகுப்பில் எவளழகும் அவுளழகிற் கீடில்லை! மலர்க்குலமும்

  • வீனஸ்: ரோமானிய அதி குத் தேவதை,