பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. வசந்தம் வருகிறது! கார்லோ கலாத்லே வந்திடும் வசந்தத் திருநாள்!-மலைவீழ் வாரியைப் போலொரு பெரு நாள்! எந்தன் தந்தை இன்புற வாழும் இல்லத் தகன்ற மூன்றில் இருந்தே விந்தை வானின் நீலவி தான விண்ணகம் தழுவி விம்மிதம் பெறுவேன்! வந்திடும் வசந்தத் திருநாள்!--மலைவீழ் வாரியைப் போலொரு பெருநாள்! 'பளிச்சென யாவும் பறித்திடும் கண்ணை ! பரிதிக் கதிரோ பாடிடும் காற்றும் ஒளியும் நிழலும் ஓடிப் பிடிக்கும் - உயர்மலை மேலே உன்னத நடனம்! குன்றுகள் விழிக்க, குளிர்புன லதனில் குளித்திடும் மார்பெனக் குவடுகள் விம்மி நின்றிடும் அந்த நேரம் மக்கள் நித்திரை இன்னும் நீங்கா திருப்பார்! வந்திடும் வசந்தத் திருநாள்!---மலைவீழ் வாரியைப் போலொரு பெருநாள்! மலையெனும் கோட்டையில் மவுனம் கலையும்! 'மஞ்செனும் பனித்திரை மலைகளின் மேலே கலைவுறா வண்ணம் தொங்கிடும் காட்சி! காண மகிழ்தரும் காலையின் மாட்சி! புதுமைசே: ஏரால் முதியவரர் உழவன் பூமியை உழுதிடும் போதினில், ஆங்கே பதிந்திடும் ஏர்த்தடப் பாதைகள் தம்மைப் பார்த்தால் எனக்கே பரவசம் என்னே!