பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடைகள் பாயும் ஓரிடம் தன்னில் . ஒதுங்கியே நிற்கும் ஒரு சிறு மாடு கூடும் கறுப்பும் ஈரமும் குடிகொள் குறுவிழி யுருட்டிக் குறித்தெனை நோக்கும்! இத்தகைப் பொழுதில் எழில்பல் வெல்லாம் - இமைகளும் நீள, இருவிழி யகன்று புத்தொளி துள்ளப் புரிந்திடச் செய்யும். புதுமையை வியக்க எவர்க்கும் புரியும்! ஆயினும் செருப்பும் அணிந்திடா மேய்ப்பன் அதிசயம், கேள்வி அனைத்துமே இல்லான்! வாயிலா தாங்கே வணங்கியே நிற்கும் , மாட்டினைத் தழுவி எய் துவன் மகிழ்ச்சி! எங்கணும் அமைதி! இன்கனித் தோட்டம், இல்லம், கடற்கரை, அலைகள் எங்கும் தங்கிடும் சாந்தி! இதயம் தனிலும் , தனிப்பெரும் அமைதி ததும்பிடும் பொங்கி! அங்குள தொலைமலை யதனிலே காற்றின் அசைவும் மெதுவாய் அடங்கும், மடியும்! வந்திடும் வசந்தத் திருநாள்!-மலைவீழ் வாரியைப் போலொரு பெருநாள்!