பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வசந்தத்தின் காலை போரில் தலிகோவ் விடியாப்பொழுதின் ஓலிகள் பலவும் விளங்காவிதத்தில் இருக்கும்! விண்ணகத்தெளிவில் நட்சத்திரங்கள் ' இன்னும் வெட்டி மினுக்கும் : விடியற் பொழுதே வாவாவென்று வேகக்குரலில் உவகை விம்மிப்பெருகிப் பெருங்களிதுள்ள வீட்டுக்கோழி கூவும்! கட்ட, காலைப்பொழுதும் வந்தது மக்காள்! கண்விழித்தெழுவீர்! இன்று காத்தே இருக்கும் கடமைகள் தம்மைக் . கடிதேசெய்ய முனைவீர்! மாலையை, இரவைக் காட்டிலும் சமர்த்தும், மதியின் நுட்பம் தானும் மலியக்காண்பது காலைப்பொழுதே மக்காள்! என்றே பகர்வார்! விழித்தேஎழுவீர் மக்காள்! விடியல் புலரக்காண்பீர்! விண்ணில் வீசும்செக்கர்க் கதிர்கள் பரந்து விரியக்காண்பீர்! இரவு கழித்தே விழித்த உம்மிடம்காணும் - கவினார்எழிலைக் காட்டிக் காலைப்புதுமை நாளும் துயிலைக் களைந்தே வருதல் காணீர்! 5 " " -5 : சோ - -