பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வசந்த கரலக் காலைப் பொழுது பெட்ரஸ் புரோவ்கா "விழித்தெழுங்கள்! செயல்படுங்கள்!” எனவிளிக்கும் வசந்தம் வேலைதனை யாவருக்கும் கண்டறிந்து வழங்கும்! களித்தெழுந்து கூடுகளைக் கட்டிமுடித் திட்ட காக்கையெலாம் ஒன்றாகக் கும்பலிட்டுக் காணும்!. 'அருகிலுள்ள கிளைகளிலே அவையெல்லாம் அமர்ந்து அலட்சியமாய் நம்மையெல்லாம் விழிவெறித்து நோக்கும்! கரையுமதன் இளங்குரலும் காலைநேரத் தின்பக் கனவினிலே இருந்து நமைக் கண்விழிக்கச் செய்யும்! வெகுநேரம் கழித்திரவில் நாம் தூங்கி னாலும் , விடியலில் நம் மனவுணர்வு விழித்தெழுந்து நம்மை,

    • வெகுநேரம் ஆயிற்றே! வீடுகளாம் கூட்டை ,

விட்டிறங்கி வேலைசெய விரைந்திடுவீர் !): 67 ன் னும்! '