பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை அண்டை நாடுகளெல்லாம் அருமை நண்பர்களாக அமைந்து விடுவதில்லை என்ற கசப்பான அனுபவத்தைச் சமீப கால நிகழ்ச்சிகள் நமக்கு வழங்கியுள்ளன. சோவியத் யூனியனும் நமக்கு அருகிலுள்ள ஓர் அண்டை நாடுதான். ஆனால், சோவியத் யூனியனோ இன்று உலக அரங்கில் பாரதத்துக்கு மிகவும் உற்ற நண்பனாக விளங்கி வருகிறது; நமது நாட்டின் நிர்மாணத்திட்டங் களுக்குப் பலவகையிலும் கைகொடுத்து உதவி வருகிறது; இதற் கெல்லாம் மேலாக, பாரதத்துக்குச் சோதனை ஏற்பட்ட காலத்தி லெல்லாம் உலக அரங்கில் நம் பக்கம் நின்று, நமக்கு - ஆதர வளித்து வந்திருக்கிறது; இதன்மூலம் நம் நாட்டின் மீது தான் கொண்டுள்ள நட்புரிமையையும் நல்லெண்ணத்தையும் நிலை நாட்டி வந்திருக்கிறது. எனவே பாரதத்துக்கும் சோவியத் யூனி யனுக்குமிடையேயுள்ள நட்பும் நல்லுறவும் நாளும் வளர்ந்தோங்கி வருகின்றன. இந்த இருபெரும் நாடுகளுக்கிடையே இமய நெடுஞ்சுவர் இடைமறித்து நின்றாலும், இருநாட்டினரின் இதயங் களும் கூடிக் குலாவுவதற்கு, எந்தவொரு நெடுஞ்சுவரும் தடை மதிலாக நிற்கவில்லை, மேலும், பாரதம் இன்று சமதர்ம லட்சியத் தைத் தனது சமுதாய மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது; சோவியத் யூனியனோ சமதர்ம லட்சியத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் உலகிற்கே மூத்த பிள்ளையாக விளங்குகிறது. எனவே அந்நாட்டின் அனுபவங்கள் நமக்கு நல்லபல படிப்பினை களை வழங்க முடியும். இதனால் நாமும் அந்நாட்டின் வாழ்வையும் வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறோம். எனினும் இவற்றைத் தெரிவிக்கும் வரலாற்று நூல்களின் மூலம் நாம் அந்நாட்டின் புற வளர்ச்சியைத்தான் பெரிதும். தெரிந்துகொள்ள முடியும். அந்நாட்டின் அகவளர்ச்சியை, இதயப் பண்பைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவற்றை நாம் உணர வேண்டுமென்றால், அந்நாட்டின் இலக்கியங்கள் தான் நமக்கு உதவமுடியும். அதிலும் குறிப்பாக அந்நாட்டின் கவிதைகள் தான் அந்த மக்களின் இதயத்தையும் பண்பாட்டையும். நமக்கு இனம் காட்ட முடியும். அவ்வாறு. இனம் காண்பதற்கு தவும். எளிய முயற்சியாகத்தான் இந்தக் கவிதைத் தொகுதி உருப்பெற் றுள்ளது, இந்தத் தொகுதியில் 38 கவிஞர்களின் 53 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிஞர்களில் ஓரிருவரைத் தவிர ஏனை யோர் அனைவரும் சோவியத் ஆட்சி மலர்ந்த பின்னரும் வாழ்ந்த வர்கள்; வாழ்பவர்கள். இன்றைய சோவியத் கவிஞர் பரம்பரையின். மூத்த பிள்ளையாக விளங்கும், எழுபது வயதைத் தாண்டி