பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. வசந்த காலப் புயல் எப், தியூத்சேவ் விலைrயாடும் பெருங்களிப்பில் சிரித்துநகை யாடி, விண்ணீல வானரங்கில் பம்மியுருண் டோடி, இளவசந்த பருவத்தில், முதன்முதலாய்க் கன்னி இடியோசை கண்கணத்து முழக்கமிடும் போது, வளமிகுந்த மேமாதத் தொடக்கத்தில், புயலின் வரவுணர்ந்து நான் தனை விரும்பி மனம் மகிழ்வேன்! குலவையிடும் சிற்றொலிகள் கலகலவென் றுருளும்; கொட்டுமழைத் தாரையெலாம் பளபளத்துப் பொழியும்; நிலம்படிந்த தூசியெலாம் பறந்தெழும்பிப் படரும்; ' நித்திலம்போல் மழைத்துளிகள் கொத்துக்கொத்தாய்த் ' தொங்கும்; உலங்களிலே படிந்திருக்கும் நீர்ப்படிவ மெல்லாம் பொன்னொளிய. சாய்த் தகதகத்து மின்னிவிளை யாடும்! பொழில்களிலே புள்ளினங்கள் கலகலத்துப் பாடும்; பொற்றைகளில் சிற்றோடை விரைந்திறங்கி யோடும்; சளசளக்கும் ஒலியெழுப்பும் காவனத்துச் செறிவும், சப்தமின்றி முணுமுணுக்கும் குன்றுகளின் சரிவும், முழக்கமிட்டுக் கணகணக்கும் முதலிடியின் ஒலியை முன்னியெழும் மகிழ்வுடனே. எதிரொலித்துக் களிக்கும்!