பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. படிகத் தெளிவொளிரும் பகற் பொழுது... எய், தியூத்சேவ் இலையுதிரும் காலத்தின் இளம்பருவச் சூழலிலே எழில் பொங்கும் நேரமெலாம் இனிமையுடன் . விரை ந்தேகும்! மலைப் படிகத் தெளிவொளிரும் பகற் பொழுது " Lமலிந்திருக்கும்! மஞ்சள் வெயில் அமைதியொடு மகத்துவமாய் வழிந்திறங்கும்! கருக்கரிவாள் தானியத்தை அரிந்தெடுத்துக் களைந்துவிட்ட கழனியெலாம் திகம்பரமாய், சூனியமாய்க் காட்சி தரும்! வெறிச்சிட்டு வெட்டவெளி வெம்பரப்பாய்ப் பரந்திருக்கும் விளை நிலத்துக் கதிர்த்தாளில் சிலந்திவலை விரித்திருக்கும்? வயல்களெலாம் வெறுமையும், வான் பறவைக் கீதவொலி " வாயடைத்துப் போயிருக்க, வரவிருக்கும் மழைப்பருவப் புயல்களெலாம் மூச்சடங்கிப் புதைந்திருக்க, பொழுதடையும் புனிதமிகும் மாலையொளி வயற்புறத்தில் பொழிந்திறங்கும்!