பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. வசந்தத்தில் ஒரு நாள் ராமிஸ் ரைஸ்குலோவ் (கிர்கீஜியக் கவிஞர்) வாய்த்த பதினெட்டு வயதெனில் உன்னரும், வாழ்வினில் எதிர்ப்படும் வழிகள்தான் எத்தனை! வாய்க்கும் வசந்தமும் இப்போது வந்தது! வான்கதிர் நல்லொளி வழங்குது! புதியவாய் இளம்பசும் புல்லினம் எங்ங்ணும் முளைக்குது! இன்ப வசத்தத்தின் இதயச் சிலிர்ப்புனை வளைத்துப் பிடிக்குது! வசந்தமும் நின் முனே வழங்கிடும் எண்ணிலா வண்ணத் தொகுதியைக் கண்டதும் உன் தலை கறங்கிக் கிறங்குது!' கண்முனே பற்பல நம்பிக்கைக் காட்சிகள் மண்டியே சேனைபோல் மல்கி நடக்குது! " வசந்த பருவத்தின் நிரந்தர மாருதம் திரையெழுந் தாடிடும் செந்நிறப் பதாகையைத் தீக்கொழுந் தென்னவே ஆக்கிச் சிறக்குது! தரையிலோர் சிறுவனும் தனியனாய்ப் புல்வெளி தன்னிலேரர் ஆட்டிளம் குட்டி போல் தாவியே களித்தாடு கின்றனன்! களித்திடும் சிறுவர்தம் கைகளில் உள்ள பல் பலூன்களும் காற்றினை இழுத்துண்டும், உலகத்தின் எல்லாக் காற்றையும்' இரைகொள மாட்டாது சிரித்து வெடித்தன! 70