பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. வான்வெளி வீரர் வரும் வழியில் யெவ்ஜெனி யேவ்துஷெங்கோ நான் வசிக்கும் லெனின்தெருவில் நாள் மலரும் காலையிலே. வான் தனுசைப் போல் நீரை வாரியங்கு தெளித்திடுவார், தினந்தினமும் காலையில் நான் வானொலியைத் ... திருப்புகையில் 'மனம்வியக்கும் பற்பலவாம் விந்தைகளை எதிர்பார்ப்பேன். வீதியல் இருந்தாலும் விண்வெளியில் வலந்திரிந்து மேதினிக்கு மீண்டுவரும் வீரரெலாம் வருகைதரும் பாதையிது! லெனின் பெயரால் பரந்திருக்கும் பெரும்பாதை ஈதென்னும் உண்மையினை எல்லோரும் அறிந்திடுவார்! விண்மீன்கள் வீழ்மீன்கள் மத்தியிலே விண்ணகத்தில் கண்மயக்கும் வேகத்தில் கறங்கிச் சுழன்றுவரும் நாளையிலே விண் வீரர் நந்தலைவர் லெனினுடனே . ஆளுக்கோர் முறையினிலே அளவௗவிப் பேசிடுவார்! வாய்திறந்து அவருரைத்த வார்த்தையெதும் இல்லாமற் போயிடினும் அன்னவர்தம் பேச்செல்லாம் நான் புரிவேன் 'உத்தமராம் லெனினும் அவர் உயரப் பறக்கையிலே வைத்தகண்ணை வாங்காமல் வாஞ்சையுடன் " பார்த்திருப்பார்? தாரகைசூழ் வான்வெளிக்கும் தாரணிக்கும் நல்லுறவுச் சீருரைத்த மாமேதை சிந்தையிலே அவ்வுறவு ' இசைந்திருக்கும் அற்புதத்தை எல்லோரும் நன்கறிவோம்! திசை திரிந்து விண்ணிறங்கித் திரும்பிவரும் விண்வீரர் தங்களது அருந்தலைவர், தாதை, உயிர் நண்பரென மங்காப் புகழ்படைத்த மாமேதை. லெனினவர் தம்' சமா திப்பின் முன் சென்றாங்கே தாள் பணிந்து, சென்றுவந்த சமாச்சாரம் அத்தனையும் சாற்றிடுவார்! விண் பயணம் முற்றியது! இட்டபணி முடித்திட்டோம்!" எனத் தமது வெற்றியினை எடுத்துரைப்பார்! மாமேதை லெனின்வரும் செவிசாய்த்து அவர் கூறும் செய்தியெலாம் கேட்டுவந்து ('சபாஷ்மகனே! என்றாங்கே சாற்றிடுவார்! ஆமாமாம். இருவிழியும் திறவாமல் இருந்தாலும் இத்ழ்க்க டையில் திருவிளங்கும் இளமுறுவல் புரிந்த்தனைச் செப்பிடுவார்?