பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. அண்டவெளிப் பயண் அற்புதம்! . ஓஸிப் கோலிச்சேவ் விண்மீன்கள் பிரமிக்க அண்டவெளிக் கப்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ககனவெளி ஏ கும்! மதிக்கவொணாப் பயணமதில் ருஷியமகன் ஒருவன் கதித்தெழும்பித் தொலைதூரக் ககனவெளி எய்தி, வானொலியில் செய்திகளை வழங்குவதை, ருஷ்யா பேணுமொரு தாளத்தின் பெருமையுடன் கேட்கும்! நெடுவானில் எதிரொலித்து நிரந்தரத்தை எய்தல் அட்டாவோ! ருஷியா மொழி வார்த்தைகளே அன்றோ? விசும்பிடையே இத்தினத்தில் விம்மியொலிக் கின்ற பசும்மொழியும் நம்ருஷ்ய பாஷையது வன்றோ? லெனினோடு *புஷ்கினெலாம் நேசித்துக் காத்த - இனியமொழி, நாமெல்லாம் இதயத்துள் போற்றும் அருமைமொழி, ருஷ்யமொழி! அம்மொழியே விண்ணில்" பெருமையொடும் உவகையொடும் பேசுகின்ற தன்றோ? அண்டவெளி மனிதனவன் அருமைமணிக் குரலும் விண்தோலைவைத் தாண்டிவந்து தெளிவுடனே விம்மும்! 'நான் சுகமாய் இருக்கின்றேன், நாட்டினரே!' என்னும் தேன்சுவையை நம்முடைய செவிகளிலே தேக்கும்! முன்னாளில் நெஞ்சகத்தே மூண்டகன வெல்லாம் ) இந்நாளில் நனவாக எய்திடுமோர் உண்மைச் செய்தியினைக் கேட்பவர் தம் செவிபாய்ச்சி, வெற்றி எய்தியதை அக்குரலும் எடுத்துநமக் குரைக்கும்! இழுக்கின்ற பூப்பரப்பின் ஈர்ப்புவலி தன்னை விழுத்தாட்டி நாமின்று வெற்றிவிழாக் கண்டோம்! ஆம்! அருமை நண்பர்களே! அறப்பெருமை கொண்டு நாம்மகிழும் பேருரிமை நம்மவர்க்கே உண்டு! ' ஏனெனிலோ, உடுக்கணம்சேர் விண்ணரங்கில் ஏறி வானவெளி தனிலுலகை வலந்திரிந்து மீண்டு வந்தவனும் சோவியத்தாம் வளம் நாடு பெற்ற மைந்தனவன் என்பதனால் மாமகிழ்வு கொண்டோம்! '* அலெக்ஸ்சர் தர் புஷ் கில் (17 99-1837) ரஷ்ய நாட்டுப் பெருங் கவிஞர்.