பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. எனது சந்ததியாருக்கு ஓஸிப் கோலிச்சேவ் வருநாளில் உங்களது வளப்பமெலாம் பெருகும் ! வலிமையெலாம் விந்தையெலாம் எல்லையற்று வளரும்! இருந்தாலும் நான்மட்டும் இன்னலுற்ற இற்றை இருபத்து நூற்றாண்டாம் இதனை விரும் பிடுவேன்! இந்நூற்றி யாண்டி தனில் 'எந்தையுமே குதிரை , இழுத்திடுமோர் வண்டியினில் செல்வதையும் கண்டேன்! தொன்னெடுவாய் நேர்வழிகள் தோற்றுகின்ற இன்றைச் சூழ்நிலையில் மெய்யன்பும் சுற்றிவளை ந் தேகும்! சூதறியா நல்லுணர்வும் சோதனைக்குள் ளாகும்! சொல்வதெனில் மலையேறும் சூழ்ச்சியொத்த நிலையே!' ஈதிருக்க, முதல் மனிதன் அயன வெளிக் கேகி இறங்கியபின், நெஞ்சகத்தில் இருந்துவந்த நந்தம் ) பொதுவுடைமை கண் காண உருவாகும் பொழுதில்... புத்துலகின் எதிர் காலப் புதல்வர் களே! நீவிர் , புதுவாழ்வும் விந்தைகளும் புதுவலியும் மிஞ்சிப் பொலிந்திடுவீர்! அதைநோக்கி முன்னேறிப் போவீர்! இருந்தாலும் நான் மட்டும் இன்னலுறும் இற்றை இருபத்து நூற்றாண்டை என்னிதயம் ஏற்பேன்!