பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. உடுக்களை வென்ற சோவியத் மானிடன் ஓல்கா பெர்கோல்ஜ் காலைப் பொழுது ; இந்நூற் றாண்டில் கழிந்தது L.பாதிக் கதிகம்: விண்சேர் கோலத் தாரகைக் குலங்கள் கண்னைாக் கொட்டக் கொட்ட விழித்து வெளிறும் வேளை யிதனில் விண்ணகம் நோக்கி விரைந்தான் ஒற்றை மனிதன்! அவனும் ஆரக் காபத் தேதும் இன்றி ஆருயி ரோடு மீண்டான் அவனி! நாமும் அவனை நன்றாய்ப் பார்த்தோம்! நம்மை யொத்த மனிதன் தானோ? நாமும் அவனை ஒத்தார் தாமோ? நம்மில் ஒருவன் தானே விண்ணில் ஏறிச் சென்றான்? தாரா கணத்தின் இயக்கம் தன்னை , இருள் - ஒளி தன்னை சூரியன் உதயம் தன்னை , இரவு தோயும் அந்தித் தோற்றம் கண்டான்? ஆம்! அவன் சதையால் ரத்தத் தாலே ஆனவர் தம்மில் ஒருவன் ஆமே! பூமியில் பதினேழ் ஆண்டில் புரிந்த பெJான்றாப் புகழின் புரட்சியின் பின் னால் ஆண்டோர் நாற்பதும் நான் கும் ஆயின! ஆயினும் இதுவரை அறியாப் புதுமையைக் காண்பதோர் வேட்கை கருத்துள் மூளக் ககனம் முற்றும் பறந்திடு கின்றோம்!