பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. வாஸ்டாக்கின் வான்வெளிப் பயணம் மைக்கேல் லெவோவ் உலகையெலாம் வலந் திரிந்து மீண்டுவந்த கப்பல். உயர்புகழை நமக்களித்த உன்னதமாம்' கப்பல் இலகுபுகழ் தனைச் சுமந்த அற்புதமாம் கப்பல் இசை ந்ததொரு அற்புதமாம் பெயரமைந்த கப்பல் பெயரிதனை' முதன்முதலில் சொல்லியபே ராளன் பெ1&ரெதுவோ? அவனிதயப் பேரரங்கில் தோன்றி உயர்ந்ததுவோ இப்பெயர்தான்? உளங்கவர்ந்தேயென்னை உவகையிலே ஆழ்த்திட்ட உத்தமன் தான் யாரோ? செவிகுளிரும் பெயரிதனைச் செப்பியவன் தன்னைச் சிறந்தவொரு கவிஞனென்றே சிந்தை தெளி கின்றேன்! புவிமனிதன் அவனென்றே புரிகின்றேன்! நெஞ்சம் புள கமுற்றுக் களிக்கின்றேன்! அட்டாவோ புதுமை! . வானகத்தில் பறந்ததுதான் வாஸ்டாக்! அதனுள் வை!ர நிகர் ககாரினெனும் வாலிபனாம் வீரன் தானமர்ந்து இதழ்க்கடையில் புன்னகையைத் தாங்கித் தாரணியைத் திட்டமுடன் வலந்திரிந்து மீண்டான்! வெற்றியிதைக் கண்டவுடன் மக்களெலாம் கூடி விண்ணதிர முழக்கமிட்டு விம்முற்றார். அதற்குள் மற்றுமொரு வாஸ்டாக்கும் வானரங்கில் ஏகி வளையமிட்டு வளையமிட்டு வந்ததடா உலகை! 'இப்போதும் எங்கேயோ, எவ்விடத்தோ மீண்டும் ஏகுதற்குத் தயாராகி மேலுமொரு வாஸ்டாக் ஒப்பற்ற வீரரொடும் இருக்கின்ற தென்னும் உண்மையினை நாமறிந்தோம்! உவகைமிகப் நகுதற்குத் தான் இருக்கின்ற உவகைமிகற்றோம்! வார்த்தைகளை நாம் வீணல் வழங்குவதும் இல்லை! - வாஸ்டாக்கோ எந்நாளும் வானகத்தில் செல்லப் பார்த்திடுவோம்! என்றென்றும் அதுபறந்து செல்லும்! பாரகத்தில் வெற்றியுடன், நம்புகழும் பரவும்!