பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட நிக்கோலாய் அசயேவ் முதற் கொண்டு, இருபது வயதை எட்டிப் பிடித்துள்ள இன்றைய இளந்தலைமுறையின் புதிய கவிஞர் களான ஓலெக் திமித்ரியேவ், ஓல்ழாஸ் சுலெய்மெ ேsr: வ், ராமிஸ் ரைஸ்குலோவ் முதலிய கவிஞர்கள் வரை பயிலும் பல கவிஞர்கள் இந்தத் தொகுதியில் இடம் பெறுகின்றனர். இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் இளவயதில் மாண்டுபட்ட, சோவியத் நாட்டின் புதிய கவிஞர் பரம்பரைக்கு முன்னோடியாக விளங்கிய புரட்சிக்கவிஞர் விள திமிர் மயாகோவ்ஸ் கியும், இன்று சொந்த நாட்டிலும் வெளி நாட்டிலும் பிரபலமாகி யுள்ள அலெக்ஸாந்தர் அவர்தோவ்ஸ்கி, மிர்ஸோ துர்சுன் ஸாதே, யெவ்ஜெனி யெவ்து ஷெங்கோ முதலிய சிறந்த கவிஞர்களும் அணி செய்கின்றனர். மேலும் சோவியத் யூனியன் பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களைத் தன்னுட் கொண்ட நாடு என்பதையும், அங்கு புரட்சிக்கு முன்னால் வரிவடிவம் கூட ஏற்படாத வழக்கு மொழிகளாக இருந்தவைகூட, சோவியத் வாழ்க்கை வந்த பின்பு, வளர்ச்சியும் மலர்ச்சியும் பெற்று, இலக்கியங்களைத் தோற்று வித்து வருகின்றன என்பதையும் நாமறிவோம் அத்தகைய பல்வேறு தேசிய இனக் கவிஞர் களையும் இத் தொகுதியில் காண லாம். அஜர்பெய்ஸான், துருக்மேனியா, ஜார்ஜியா, கஜாக்ஸ் தான், கிர்கிஸ்தான், தாஜிக்ஸ்தான் முதலிய பிரதேசத்துக் கவிஞர் களையும், மற்றும் சிறுபான்மைத் தேசிய இனமான எவங்க் மொழிக் கவிஞர் ஒருவரையும், பிற ருஷ்யக் கவிஞர்களையும் இந்தத் தொகுதியில் நாம் அறிமுகம் செய்து கொள்கிறோம், எனவே, இந்தத் தொகுதி சோவியத் யூனிபனின் எண்ணத்தையும் இதயத் தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் என்று நம்புகிறேன். - இந்தத் தொகுதியில் அடங்கியுள்ள பலவகைப்பட்ட கவிதை களையும் நாள் ஏழு பகுதிகளாகப் பிரித்துள்ளேன், முதற்பகுதியில் இன்றைய சோவியத் குடியரசின் முதற்பெரும் நிர்மாண கர்த்தா வான லெனினுக்கு, சோவியத் கவிஞர்கள் செலுத்திய கீதாஞ்சலிப் பாடல்கள் சில இடம் பெறுகின்றன. அடுத்த பகுதியில் சோவியத் நாட்டு மக்களின் வாழ்க்கை , தியாகம், ஊக்கம், உற்சாகம் ஆகிய வற்றைக் காட்டும் சில பாடல்கள் இடம் பெறுகின்றன. மூன்ற வது - பகுதியில் ', சோவியத் கவிஞர்களின் எண் ணத்தையும், இதயத்தையும், லட்சியத்தையும், புதிய கருத்துக்களையும், கற்பனைகளை யும் புலப்படுத்தும் பல்சுவையான க வி ைத களைக் காணலாம். ஆண்டிற் பெரும்பகுதி கடுங்குளிரின் மத்தியில் வாழும் ருஷ்ய மக்களுக்கு, கதிரவனின் வரவும், வசந்தமும் வரப்பிரசாதமாகும். நமது நாட்டில் - நிலவையும் தென்றலையும் பற்றிப் பாடாத புலவர்கள் இல்லை என்பதைப் போலவே, ருஷ்ய் நாட்டில் வசந்த பருவத்தைப் பற்றிப் பாடாத