பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கே நீ சென்றால் பாடத்தைக் கேட்டதற்கு உள்ளே அனுமதிக்க ஒப்பார்கள்! என்றுரைத்தான். பின்னரவன் செர்யோஷா தனைக்காணப் புறப்பட்டான். சின்னவன் தான் என்றாலும் செர்யோஷா முகம் கழுவிச் சுத்தமாய் உடைய;டுத்திச் சுறுசுறுப்பாய்ப் 4.4றப்பட்டுச் ', சித்தமொடு நின்றிருந்தான்! சீரிதனைக் கண்டவுடன் சித்தம் மகிழ்ந்தவனாய் செர்யோ ஷா பள்ளிப்பைப் பொத்தானை மாட்டிவிட்டுப் புறப்பட்டான் முர்ஜில்கா! சின்னஞ் சிறியவளாம் மாருஸ்யா எனுஞ்சிறுமி தன்னைப்போய் முர்ஜில்கா சந்தித்தான். அவள்மறந்த பென்சில்கள் நிறைந்திருக்கும் பெட்டி தனை எடுத்தவனாய் முன்சென்று அவளிடத்தே முர் ஜில்கா கொடுத்திட்டான் . “நன்றிநன்றி, முர்ஜில்கா! நல்லபடி துணைசெய்தாய்!” . என்றவளும் மகிழ்ச்சியோடும் இனியையொடும்: ' . பதிலுரைத்தாள். பள்ளிமணி ஒலியலையைப் பரப்பிக் கண கணத்து, (பிள்ளைகளே வாருங்கள் பள்ளியிலே நீங்களெல்லாம் சேருகின்ற நாளிது காண்! ஆதலினால் சிரித்தோடி வாருங்கள்! என்றழைத்து வரவேற்புக் கூறியது!. இத்தனையும் செய்தபின்னர் இப்போதோ முர்ஜில்கா மெத்தக் களைத்தவனாய் வாசல்நடை மீதமர்ந்து, 'ஓய்வெடுத்தான்; மூச்செறிந்தான் ! என்றாலும் ' உள்ளத்தில் பாய்கின்ற நிறைவுணர்வால் பரவசங்கள் எய்திவிட்டான்! காலை யிளம்பொழுதைக் கருத்துடனே பயன்படுத்தி . வேலைசெய்த திருப்தியிலே வீற்றிருந்தான் ஆமாமாம். அத்தினத்தில் அவன் செய்த அரியதொரு சேவையினால் எத்தனையோ - பாலரெலாம் பள்ளிக்கே ஏகிவிட்டார்! உற்றதுணை புரிந்தவனும் உதவியதால், பாலரெல்லாம் கற்றுச் சிறந்திடுவார்! பள்ளியிலே களித்திருப்பார்!