பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களைப் பிரபலப் படுத்தவும், அவற்றைக் குழந்தைகள் நாடவும் சோவியத் நாட்டில் 'கதைப் புத்தக தினம்' நடத்துகிறார்கள், அ த் த ல க ய தினமொன்றில் எழுதிய பாடல் இது. சாமுவேல் மார்ஷ ரக் சமீப காலத்தில் காலஞ்சென்ற சிறந்த குழந்தைக் கவிஞராவர். 42. கதைப் புத்தக தினம் சாமுவேல் மார்ஷாக் இந்த விடுமுறையை எந்நாளும் உம்மனத்தில் சிந்தித் திருந்திடுவீர், சின்னக் குழந்தைகளே! . இத்தினம்போல் நாமெல்லாம் என்றேனும் கண்ட துண்டோ ? புத்தகங்கள் குழந்தைகட்குக் கதைசொல்லும் புத்தகங்கள்! குழந்தைகளே! இந்நூல்கள் உமையெல்லாம் கூப்பிட்டு அழைத்தேகும் உலகுபுகழ் அரண்மனை யாம் இவ்விடத்தே ! குறுகுறுப்புக் குணங்கொண்டீர் ஆனாலும் இங்கிருந்து கருத்தோடும் அமைதியொடும் கதைகளை நீர் கற்றிடுவீர் ! உங்களுக்காய்க் கதை நூல்கள் உருவாக்கு வார்தமக்கு இங்கே நீர் தீர்ப்புரைக்கும் நீதிபதி யாயிருப்பீர் ! எழுதுபவர் யாவருக்கும் எச்சரிக்கை! இந்நாளின் எழுத்தாளர் எல்லோரும் எதிர்கால மானிடரை, எல்லையற்ற வான்வெளியை இனங்கண்டு மீளவரும் வல்லவரைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டுமன்றோ? பிள்ளைகளே பின்னாளில் பெரியவராய்ப் பலதொழிலில் உள்ளவர் நீர் ஆனாலும், எங்கே தான் உறைந்தாலும், கதை நூல்கள் தினமிதனைத் கருத்தூடே நினைவூட்டும் முதல்நால்கள் எந்நாளும் உம்முளத்தின் முன் நிற்கும்