பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத்து நாடு முதல் ஜப்பான் கிரேக்கமென . மேவிடுடல் நாடுவரை விரிந்திருக்கும் மேதினியில், பிறப்பென்னும் இனமென்னும் பேதமெலாம் தான் கடந்த சிறப்புடைய ஆண்பெண்கள் சேர்ந்தே தத்தமது சக்தியினைத் தா னறிந்து சாந்தியினைக் காப்பதற்காய் இத்தினத்தில் மேலோங்கி எழுவதையும் காண்கின்றோம் ? உலகத்தின் எதிர்கால வாழ்வுக்கோர் - உறுதியென இலகிடுநம் பிள்ளை யெலாம் நாம் வாழும் இப்புவியில் அமைதியிலே வாழ்ந்திடுக! அமர்க்களத்தின் புயங்கரங்கள் குமைந்தொழிய, சாந்தியிலே குதூகலித்து வாழ்ந்திடுக ! இளவேனில் பருவத்தே எழில்கொழிக்கும் மலரினம்போல் வளர்ந்திடுக ! பொலிந்திடுக ! வாழ்வெல்லாம் மலர்ந்திடுக! 81 சோ -6