பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கான்யா ஓர் அழுமூஞ்சி எச். பார்ட்டோ என்ன குரல், அது என்ன ஒலி?-பொழுது ஏகவரும் பசு கன்றை யெண்ணி , முன்னும் கதறலோ?.... இல்லை! அது--அழு மூஞ்சிஎம் கான்யாவின் கூக்குரலே! ' சிந்திய மூக்கும் சிணுங்கலுமாய்-கண்கள் செக்கச் சிவந்திட அழுதழுது முந்தியைக் கண்ணீரால் முழுக்காட்டும்---அழு - மூஞ்சி அவள் செய்யும் கூக்குரலே! வீட்டை விட்டு வெளிச் சென்றுவிட்டால் - கான்யா வீதியெலாம் ஒரே நாற்றமென்றே மீட்டும் திரும்பியே வந்திடுவாள் - இனி {மேலெங்கும் சென்றிடேன் என் றழுவாள்! வீட்டுக்குள் சுற்றியே வந்திடுவாள்- அதில் " வெறுத்துச் சலித்துளம் வெம்பிடுவாள்! (பூட்டிக் கிடப்பதோ வீட்டுக்குள்ளே'-என்று புழங்கிப் புலம்புவாள்! பொங்கிடுவாள் ! “சாப்பிடு கண்ணே !' என்று கெஞ்சி -- பெற்ற தாயவள் காய்ச்சிய பால் கொணர்ந்தால் (கோப்பை பெரிதாய் இருக்கு தென்பாள்...'வேறு கொண்டுவா!' என்றழக் குரலெடுப்பாள்! அன்னையும் சின்னதோர் பாத்திரத்தில்--பாலை ஆற்றியெடுத்தவள் அருகு சென்று 4. சின்னஞ் சிறு கண்ணே ! எழுந்திரடி.!'-என்று செல்லமாய்க் கொஞ்சிடும் வேளையிலே, 'பாலை யெடுத்துச் செல்! தேநீர் கொண்டா !'--என்று பாடம் படிப்பாள் ! அடம் பிடிப்பாள் ! காலை யுதைத்துக் குதித்திடுவாள் - இரு கண்ணைக் கசக்குவாள்! அழுதிடுவாள் !