பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிலில் தூங்கிடச் சென்றாலும்-கான்யா 'கண்கள் உறங்கிட வில்லை/' என்பாள்! தொட்டில்குழந்தைபோல்அடம் பிடிப்பாள்--கான்யா துள்ளிவிழுந் தழத் தொடங்கிடுவாள்! விக்கியும் முக்கியும் விம்மி விம்மி--கான்யா வீறிட்டழுதிடும் குரல் கேட்டு அக்கத்தில் பக்கத்தில் உள்ளவர்கள்--அது ஆரென்று பார்த்திட உள்ளே வந்தார், . உள்ளே வந்தவர் கண்களினால்-கான்யா உச்சி முதல் உள்ளங் கால் வரையில் வெள்ளப் பெருக்கெனக் கண்ணீராய்-முகம் வீங்கி யழக் கண்டார்! வியப்படைந்தார் ! ('என்னடி கான்யா? ஏனழுதாய்!-வயது - ஏழும் முடிந்ததே! இன்னும் நீ சின்னஞ் சிறிசோ? அழலாமோ?--கண்ணீர் சிந்திச் சிணுங்கிடல் அழகாமோ? ஆளான வயதேழு ஆனபின்னும் -நீ அழுமூஞ்சிப் பிள் ளை யாய் இருந்து வந்தால் காளான் உன் மூக்கில் முளைக்குமடி!-ஜல்தி, கண்ணைத் துடையடி! என்றுரைத்தார்!