பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. இல்லை! இல்லை இது வேறு! விக்தர் கொஞ்சரோவ் இல்லையில்லை! இதுவேறு. இந்தியாவின் கதைவேறு! சொல்வதெனில்- நீர்சேராக் கருமசியின் நிறமொத்த கரு நிழல்கள் ஓர் பக்கம்; வெய்யோனின் உருக்கிவிட்ட கண்ணாடிக் - குழம்பைப்போல் தெருக்களிலே கொதித்தோடிப் பரவுந்தீப் பிழம்பொருபால் சிரங்குச் சொறி பிடித்து, சீழ்பிடித்துப் பஞ்சடைந்த குரங்கொன்று அவ்வொளியில் கூசிக் கண்சுருக்கும்! இல்லை! அந்தக் கதை வேறு இந்தியாவின் நிலையதனைச் சொல்ல வந்தால்- ஊர் சுற்றிப் பார்க்கவந்த உல்லாச யாத்திரிகர் ஓர் வட்டத் திற்பாதி உருவம்போல் வளையமிட்டுப் " பார்க்கின்றார் ! பார்க்குங்கால் பகலவனின் வெய்யொளியில், சின்னஞ் சிறியவொரு சிறுகீரிப் பிள்ளை யது முன்னோடி வந்தாங்கே முகஞ்சிணுங்கி, மெலநின்று பின்னும் ஒருதடவை பிணங்கிச் சிணுங்கியதே! பிரகிருதித் திருத் தோற்றப் பேரிதயம் தனிற்பொதிந்து தருகின்ற எழில்மீது தாளாத காதலுறும் ஒரு கவிஞன் போலுமது உருக்காட்டி நின்றதுவே! பின்னர் நிழ லூா டிருந்து பெரியதொரு கருநாகம் தன் னுருவை மெலக்காட்டித் தட- மூர்ந்து வந்ததுவே! இருளாலும் இரவாலும் இயற்றியதோர் உயிரென்ன, மருளாலே ஆளாக்கி வளர்த்திட்ட, பொருளென்னக் - கருநாகம் நெளிந்துவரக் கண்டவுடன் சிறுகீரி உருவெல்லாம் புல்லரித்து உதறிப் படபடக்கப் பெருமூச்சு விட்டெறிந்து பின்னிடித்து உஷாராகித் தேகத்து மயிர்க்கால்கள் சிலிர்த்து விறைப்பெய்த நாகத்தை எதிர்நோக்கி நகர்ந்ததுவே!... 84