பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரியமணி சிறுபாசிக் கண்களிலே பெருமூர்க்க வெறிகொண்ட ஒளிவேகம் வீசிக் கணகணக்க, பயத்தோடு நெளிகின்ற பாம்புக்கோர் எச்சரிக்கை . நயத்தோடு செய்வதுபோல் நாட்டியமும் ஆடி. யதே! கண்ணாடி தானணிந்து, கண்பறிக்கும் 1:லநிறத்து வண்ணாடை தான் தரித்து, வாய் பிளந்து பிரமிக்கும் : ஊர் பார்க்க வந்திருந்த உல்லாசிகளை, மற்றும் சூரியனை சுடுகாற்றை , சுகந்தம்சேர் பிரகிருதிப் பேரழகைப் பற்றியவோர் பிரக்ஞை சற்று மில்லாமல், கீரியதும், நாகமதும் கிறுகிறுத்து ஒன்றையொன்று நேர் நின்று எதிர்நோக்கி நெருங்கத் துணிந்தனவே! இருவேறு உலகங்கள், இருவேறு உயிரினங்கள்,, இருவேறு மரணங்கள், இருவேறு மின்கொடி.கள் , வெறிவேகத் தொடுதாக்கி வெம்போர் விளைத்தனவே! அருவருக்கும் இருளுருவம் அமைத்திருந்த கருநாகம் கருவருக்கத் துணிந்திட்ட காரியம்போல், கீரியதன்' சிறுவுடலைப் பிணைத்திறுக்கிச் செயலிழக்கச் செய்ததுவே! ஒரு கவிஞன் போலுமங்கு உருவளித்த கீரியதன் பெருவேகக் கவிதையுங்கு பிறப்பதற்குப் பாதையில்லை ஒருகணமும் நிற்காமல், ஓருணர்வும் இல்லா!£ல், ஒரு நினைப்பும் தோன்றாமல் உற்ற கதை உரைப்பதுவோ? இல்லையில்லை! இதுவேறு! இந்தியாவின் கதையதனைச் சொல்வதென்றால்- சிறுகீரிப் பட்டுடலைச் சேர்த்து நெருக்குமந்தக் கருநாகம் தன்வாயின் கடுவிடஞ்சேர் பற்களினால் வெறிகொண்டு தாக்குதற்கும் வேகந்தான் கொண்டதுவே! பார்த்திருந்த நாங்களெல்லாம் பட...!டத்தோம்; ' .' நிலையிழந்தோம்! வேர்த்தோம்! போதும்! இந்த வெறியாட்டக் கொலையிதனை நிறுத்” தென்று வாய்விட்டு நிமிடத்தில் கத்திவிட்டோம்! இருந்தாலும்- - கரு நிறத்துக் கடவுளர்பேரல், களிமண்ணைச் தட்டெடுத்த உருவம்போல் தாடியொடு உருக்காட்டும் பாம்பாட்டி