பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துக்கள் இருபேரும் எதுவுமே பேசவில்லை! இந்த நிலைமையிலே எல்லாம் முடிந்ததெனச் சிந்தித்தோம்! மறுகணத்தில் சித்துவித்தை செய்ததுபோல் அந்தவொரு திருக்காட்சி! சின்னஞ்சிறு கீரியது சிலிர்த்தே உடல்நெளித்து தன் சிறிய பல்லினொளி, தான் தெரிய வாய்திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கரு நாகத் தின் தலையைக் கவ்விப் பிடித்ததனைக் கடித்துக் குதறியதே!' (6எவ்விதத்தில் நிகழ்ந்ததிது?' என்பதனை யாமறியோம்!. அவ்வேளை ; கருநாகத் தின் தலையைக் கவ்விவிட்ட மறுகணத்தில் குருதி பொங்கிப் புழுதியினில் கொட்டுவதைத் - தான்கண்டோம்! - இல்லையில்லை! இதுவேறு! இந்தியாவின் கதையதனைச் சொல்வதெனில்- கடுவிடத்தை வைத்திருக்கும் கருநாகந் தனைமரணக் கொடும்பிடியால் பிடித்துயிரைக் குடித்ததுவே சிறுகீரி! - பின்னர் அந்தச் சிறுகீரி பெருமிதமும், பெருமகிழ்வும் ) முன்னுவெற்றிக் களிசிறக்க முகந்தூக்கி, எமையெல்லாம் அண்ணாந்து பார்த்துளத்தில் அறச்செருக்குக் . .

கொண்டதுவே

அவிந்திருந்த உணர்வெல்லாம் ஆர்வமுடன் மேலோங்கக் கவியாக எம்முன்னே காட்சியது தந்ததுவே ஒருவர் துணை இல்லாமல், உதவிகளும் இல்லாமல், பெருவீரன் தனைப்போலும், பெருங்கவிஞன் தான் போலும் கருநாகம் தனை வெற்றி கீரியதும் கண்டதுவே! திரையிட்டு மறைத்ததுபோல் தெரிகின்ற கிண்டலொளி உறைகின்ற கண்களிலே ஒளிமிஞ்ச, எமைப்பார்த்து. சிறுகீரிப் பிள்ளையது சிரிப்பதுபோல், வாய்திறந்து' ஒருவார்த்தை சொல்வதுபோல் உணர்ந்திட்டோம்! - ((கண்ணாடி தா னணிந்த கண்ணாடிக் கண் படைத்த அண்ணாத்தை மார்களே! அரக்கர்களே! நானிங்கு தனிமையிலே பாம்போடு சண்டையிட்ட காலத்தில் ,