பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்கள் இல்லை எனலாம். எனவே நான்காம் பகுதியில் அத் தகைய வசந்த பருவம் பற்றிய பாடல்கள் சில இடம் பெறு கின்றன. சோவியத் நாடு வான்வெளிப் பயணத்தில் அடுத்தடுத் துப் பெற்றுவரும் வெற்றிகள் இன்று அகில உலகத்தின் கவனத் தையும் கவர்ந்துள்ளன என்பதை நாமறிவோம். மானுடத்தின் வெற்றியான இந்தச் சாதனைகளை வாழ்த்தி வரவேற்று, சோவியத் கவிஞர்கள் சிலர் பாடியுள்ள கவிதைகள் ஐந்தாம் பகுதியில் அடங்கியுள்ளன, வளர்ந்துவரும் குருத்துக்களான குழந்தை களின் வளர்ச்சியில் ருஷ்ய நாட்டினர் மிகுந்த அக்கறை காட்டு கின்றனர் என்பதும், குழந்தைகளுக்காக அவர்கள் ஏராளமான வண்ணப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் நாமறிந்ததே. அந் நாட்டில். குழந்தைகளுக்கென்றே பாடல்கள் எழுதும் குழந்தைக் கவிஞர்கள் பலர் உண்டு. அத்தகையோரின் சில கவிதைகள் அடுத்த பகுதியில் இடம் பெற்றுள்ளன. ஏழாவது பகுதியில் சோவியத் மக்கள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நட் புறவையும் நல்லெண்ணத்தையும் புலப்படுத்தும் பத்துக் கவிதை கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை இயற்றியவர்களில் இராக்லி அபாஷித்ஜே , விக்தர் கொஞ்சராவ், காரா. த்லேவ் முதலியோர் இந்திய நாட்டுக்கு விஜயம் செய்து, நமது நாட்டையும், நாட்டு மக்களையும் நேரில் கண்டு சென்றவர்கள். இவர்களது இந்திய விஜயம் இந்தியாவைப் பற்றிப் பல பாடல்களை எழுத இவர்களைத் தூண்டியுள்ள து. இந்தப் பகுதியில் இடம் பெறும் கவிதைகள் இந்தியர்களான நமக்குக் களிப்பும் பெருமிதமும் கேட்டுவன வாகும். இறுதியில் இந்தியக் கவிஞர்கள். சிலரது பாடல்கள் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. (சோவியத் கவிஞர்கள் நம்பால் காட்டும் நட்புரிமையைப் பற்றிய பாடல்களோடு. நம் நாட்டுக் கவிஞர்கள் அவர்கள் பால் காட்டும் நட்புரிமையைப் புலப்படுத்தும் சில பாடல் களை இங்கு நினைவு படுத்துவது சாலப் பொருத்தமே. அதற்கேற்ப அமைந்த அனுபந்தத் தில் மலையாளக் கவிஞர் வள்ளத்தோல், இந்திக் கவிஞர் பிரேம்தவன், வங்கக் கவிஞர் சௌ த்ரி ஆகி யோர் கவிதைகளின் தமிழாக்கங்களோடு, தமிழ்க் கவிஞனான எனது கவிதைகள் இரண்டும் இடம் பெற்றுள்ளன, மொழிபெயர்ப்பு என்பது ஒருகலை. அந்தக் கலையில் வச் னத்தை மொழிபெயர்ப்பது ஓரளவுக்கு எளிதான து; கவிதையை மொழிபெயர்ப்பதோ, மிகவும் சிரமம்.. கவிதையை மொழிபெயர்ப் பதற்கு ஒருவன் கவிஞனாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, மொழிபெயர்க்கும் கவிதையின் கருத்தும் உணர்வும் உருக்குலையாத வண்ணம், மொழிபெயர்ப்புக்கு வடிவும் வலுவும் கொடுக்கும் பொறுப்பும், திறமையும் அவனுக்கிருந்தாக வேண்டும். மேலும் எதுகையும் மோனையும் தாளக்கட்டும் சமயங்களில், ' மூலக் கவிதையை நீட்டவோ, குறுக்கவோ தூண்டும் நிர்ப்பந்தங்களை