பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. இந்தியக் கவிஞர்களுக்கு இராக்லி அபாஷித்ஜே (ஜார்ஜியக் கவிஞர்) போர்முழக்கம் ஒழிந்தழிந்து, பூவுலகில் நின்றுலவும் - பொச்சாப்பும் பகையுணர்வும் வலுவிழந்து போயொழிந்து பார்மகிழும் திருநாளில் பாட்டரங்கம் கூடட்டும் ! பரவசத்தோ டவ்வரங்கில் நான்வந்து பங்கெடுப்பேன் ! பாட்டரங்கில் ஒளிசிதறும் பந்தங்கள் நின்றெரிய, , பாடகரும், கவிஞர்களும் படைதிரண்டு கூடிவந்து போட்டியிலே பங்கெடுத்துப் புதுப்புதிதாய்ப் பாட்டுரைக்கப் பொழுதலரும் வேளை வரை இரவெல்லாம் பொலியட்டும்! தண்ணிலவுத் தேனொளியில் தானொலிக்கும் பாட்டெல்லாம் தாஜ்மகால் மேல் நிவர்ந்து எதிரொலித்துத் தாவட்டும்! மண்ணுலகின் திசையனைத்தும் விம்மட்டும் அத்தகைய மாட்சிமிகும் கவியரங்கில் மா நிலத்தின் கவிஞரெல்லாம் அணிவகுத்துத் திரளட்டும்! அவர வர்தம் தனித்திறமை அடுத்தவர்க்குச் சளைத்ததிலை எனும் விதத்தில் ஆகட்டும்! எந்தமது காகஸிய பூர்க்காவரம் இன்கவிதை இந்தியநன் னாட்டினிலே எதிரொலிக்கச் செய்திடுவோம் ! இந்தியர்க்கும் கூர்க்கருக்கும் யாவருக்கும் இயைந்ததுவாய் எங்களது பாடல்களை யாமங்கு இசைத்திடுவோம்! நந்தமது பாடலெலாம் நம்மிதயம் தனிலோங்கும் நல்லுணர்வின் உறவோடு நாற்புறமும் ஒலிக்கட்டும்! -- எந்தமது கலையுலகப் போட்டிக்கே இசைவுடனே எழுந்தருள்வீர்! சர் தாரே! முகம்மதுவே! வருந்தருள்வீர்!.. இரவினிலே கைகோத்து இணைந்திடுவோம் என்றாலும் எவர் மனத்தும் அச்சத்தை எழுப்புதற்கு இடமளியோம்! அருமையுள்ள நண்பர்களே! அருகணைந்து வந்திடுவீர்! அன்பார்ந்த பெய்ஸும் நம் அறக்களத்தில் சேரட்டும் ! 88