பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணொளியின் கதிர் பரப்பி மெல்ல விழும் பால்நிலவின் விந்தையிலே நாம்களித்து, பொறிபறக்கும் " வார்த்தைகள்சேர் பண்ணொலியால், புதுமைமிகும் பாரதத்தின் பெருமைகளைப் பாடல்களால் புகழ்ந்தேந்திப் பாடிடுவோம்! பரவிடுவோம் ! இந்தியநன் னாடுறையும் இளம்வயதுக் கன்னியர் தம் எழில்மிகுந்த வனப்புகளை, என்னிதயம் கொள்ளை கொளும் விந்தையெனும் அன்னவர் தம் பட்டு நிகர் மென்கரத்தை வேண்டுமட்டும் நாம் அங்கு வியந்தேத்திப் பாடிடுவோம்! சிந்தையிலே நட்புறவைத் தூண்டிவிடும் தன்மையிலே திபிலிஸ்முதல் டில்லி வரை திருப்பணியும் செய்திடுவோம்! இந்திமொழிக் கவிதையொடு எங்களது கார்த்வேலி இன்னிசையின் பண்ணமைப்பை இரண்டறவே கலந்திடுவோம் ! [பூர் க் கா : காகேஸியப் பிரதேசத்துப் பாடல் வகை. பெய்ஸ் : பிரபல உருதுக் கவிஞர். கார்த்வேலி : ருஷ்ய நாட்டுப் பண், பாட்டரங்கம் : வட நாட்டில் விடிய விடிய நடக்கும் 'முஷைரா? என்னும் கவியரங்கம், தமிழ் நாட்டு லாவணி போன்றது: