பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. நீலப்பறவை இராக்லி அபாஷித்ஜே இந்தியநன் னாட்டினிலே எங்கணுமே நான் திரிந்து விந்தைமிகு ஏழுவகை வியாப்பெல்லாம் கண்டறிந்தேன்! என்றாலும் பள பளக்கும் இள நீலச் சிறுகுருவி ஒன்றையான் கண்டதையே விந்தையிலும் விந்தையென்பேன் என்னாட்டின் பறவையது : என்னருமைத் திருக்குமரன் தன்னையே ஜீலத்தின் கரையருகே தான் காணப் .. பெற்றாலும் இத்தகைய பெருவியப்பை யானடையேன்! 2.ற்றதொரு நண்பனைப்போல், உற்பவித்த தாய்நாட்டின் திசையிருந்து வீசுகின்ற தீஞ்சுவைசேர். மாருதம்போல் விசைபிறந்து என் தலைமேல் விறுட்டென்று தாவியதே ! என்னருமைக் கண்மணியே! என் தலையைத் , தொடுவது போல் துன் னென்று நீ..றந்தாய் ! என்னுளத்தைத் தொட்டுவிட்டாய்! , வண்ண நிறச் சிறுகுருவி 1 வளையமிட்டுச் சுழன்றுயர்ந்து விண்ணகத்தில் நீ பறக்கும் விந்தையிலே கண்டதென்ன? , கீழுருளும் பனிப்பாறை கிடுகிடுக்கும் கர்ச்சனை போல் பேழ்வாயபின் யானையொன்று பிளிறுகின்ற ஓலிகேட்டேன் என்றாலும் நீஎழுப்பும் இன் னொலியை யான் எங்கு சென்றாலும் நினைத்திருப்பேன்! சிந்தையுளே கேட்டிருப்பேன்! தாயகத்துச் சோதரர்கள் தானனுப்பும் வாழ்த்தொலியை நீயெனக்கு எடுத்துரைக்க, நீள் இமய மலைகடந்து. பிறந்தகத்தைப் பின் விடுத்துப் பிரியமுடன் வந்தனையோ ? பறந்துவரும் நீல நிறப் பறவைகளே, ! வாழ்த்துரைத்தேன் ! (குறிப்பு; பறவைகளின் தேச. சஞ்சாரத்தைக் கண்டு பாடியுது;} 40)