பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. காலைப் பொழுதில் டில்லி ஆனதோலி சோவ்ரோனோவ் 14ள்ளினத்தின் ஒளிபJ 1ர்ப்பப் பொழுது புலர் கிறது! ; வெள்ளென்று கீழ்வானில் வெதுவெதுப்புரப் புரையோடச் செக்கர் பட்டர் கிறது ; செல்பவராய் வருடாவராய் மக்கள் தெருக்களிலே மாகடலின் அலைத்திரனின் ஏற்றம் இறக்கமென இயங்குகின்றார்; இத்தகைய தோற்றத்தில் கண்விழிக்கும் தொல்புகழ்சேர் டில்லிநகர்! . புலரும் இளம்பொழுதின் புல்லாங் குழலிசைபோல் மலரும் கனிவகையும் மலிந்து மணம் பரப்பும் ; நீளவிளந் தெளிவின் நிறத்தில், செம்பழுப்பில் சேலைவகை கண்கவரும்; செல்கின்ற ரயில்வண்டி உங்களொடு என்னையுமே உரத்தே அறைகூவும்; செங்கோட்டை வெளியினிலே சின்னஞ் சிறார் பலரும் களித்துவிளை யாடிடுவார்; ககனத்து வியா ன ங்கள் தளத்தினிலே மெதுவாகத் தாழ்ந்திறங்கும் ; மென் மலராம் கண்மூடித் தூங்குகின்ற கைக்குழந்தை கண் சைரிமை போல் மென்மையோடும் தன்மையொடும் விளங்குகின்ற டில்லி நகர் ! கனிந்திருக்கும் ஆரஞ்சுக் கனிவகைகள் நடைமேடை தனிலெங்கும் நிறைந்திருக்கும்; தட்டியிட்டு வெயில் மறைத்த பத்திரிகைக் கடைகளிலே பாவையர்கள் சிரம்சாய்த்துப் புத்தகத்தில் ஆழ்ந்திருப்பர்; புதிர்கள் நிறைந்திருக்கும் " கோவில்களும் அங்கிருக்கும்; குடிமக்கள் தம்முழைப்பால் ஆவலொடு சரித்திரத்தை ஆக்கிப் படைத்திடுவார்; இத்தகைய தோற்றத்தில் எழில்வண்ணத் தாலான சித்திரம்போல் காலையிலே சிறந்தொளிரும் டில்லி நகர்! என்றென்றும் கதகதப்பாய் இருக்கின்ற நாடுகட்குச் சென்றேகும் பெருவழிகள் ; சிந்தை தனை மறந்த - கனவினிலே யமுனை நதி களகளக்கும்; வெண்புறவின்