பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திமொழிக் கோஷம்தான்! என்றாலும் இனம்புரியா விந்தையல்ல! நாமிருவர் வெகுநாளாய் நமக்குள் ளே சொந்தமுடன் பந்தமுடன் சொல்லிவரும் கோஷம்தான்! இவ்விதமாய் யாமங்கு மெல்லமெல்ல இணைசேர்ந்து செவ்வியுடன் வளர்த்திட்டோம் ! சீக்கிரமே என்னையவர் 'இந்தியனென் றழைத்திட்டார்! என்றானது. உடற்தோலின் சொந்த நிறம் கறுத்ததனால் சொல்லவில்லை ! எங்களது இதயங்கள் ஒன்றெனவே. இணைந்ததனால் யாமந்தப் புதுமையிலே சிந்தனையும் பொருந்திவரக் கண்டிட்டோம் ! எங்கள் திரு நாட்டுக்கு யான் திரும்பும் வேளையிலே உங்கள் திருத் தோட்டத்தின் உவகைமிகும். மலர்க்குலத்தைப் ஈத்துவந்தீர்! தொலைவினிலே இருக்குமென் றன் தோட்டத்தில் பூத்தொளிர் ந்து மணம்பரப்பிப் - புன்னகைக்கும் அம்மவர்கள் ! விருந்தினரை வரவேற்கும் , இந்தியர்தம் வியத்தக்க அருந்தகைமை நிறைந்தொளிரும் மலர்க்குலமே அவையாகும்!