பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இந்திய மகள் காரா ஸித்லேவ் காலையில் நடுங்கும் பனித்துளி யென்னக் கருக்கொளி பாய்ந்த ரோஜா மலரும் கோலம் கண்டொரு குயிலும் உவகைக் குறிப்பில் இன்னிசைப் பாடலைக் கூவும் ! இளவெயில் பருவத் திந்திய மண்ணில் இன்னரும் பட்டினை - யொத்திடும் மேனி வளமிகும் இந்திய 'மகளினை ஓர் நாள் வழியினிற் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்! இந்திய மகளே! நீயொரு ரோஜா : எழில்மலர் போலே பூத்திருக் கின்றாய்! சிந்தை கவர்ந்த குயிலும் பாடல் செப்பிடும் உண்மை இப்பொழு தறிந்தேன் ! பொருந்திய நின்னொளி வதனப் பொலிவில் புருவத் தூடே நுதலில் திலகம். இருந்திடும் ! அதுவோ இனியதோர். கீதத்.. திறுதியைக் காட்டும் முத்தாய்ப் பாகும் !