பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தாகூர் இல்லத்துக்கு விஜயம் காரா ஸீத்லேவ் இந்திய் நன் னாட்டினிலே எங்கணுமே நான் திரிந்து விந்தை நிறை அழகையெலாம் கண்டுள்ளம் "மிகவியந்தேன். என்றாலும், பலநாளாய் இதயத்துள் ஓராசை நின்றதுண்டு; தாகூரின் இல்லத்தை நெஞ்சாரக் .. கண்டுவிட வேண்டுமெனும் கருத்துத்தான்! அவ்வாறே கண்டுகொண்ட மகத்தான கணப்பொழுதை நான்மறவேன்! விரி நீலக் கடற்பரப்பும் வெம்மைமிகும் பகலொளியும்' தெரிகின்ற கல்கத்தா நகரத்துத் தெருவொன்றில் ஆர்வமுடன் நான் புகுந்து அவர் வதிந்த இல்லத்தைப் பார்வையிட்டேன்! அதுவரையில் நான் பார்த்து வந்ததெலாம் கோலாகலம் மிகுமாட கூடங்கள், அரண்மனைகள், ஆலயத்தின் பிரகாரம் ஆன இவைகளைத்தான் ! என்முன்னே அக்கணத்தில் இருந்ததெலாம் எளிமைமிகு சின்னதொரு கட்டிடம்தான்! செம்பொன்னால், வெண்சலவைக் கல்லால் இழைக்காது, காட்டுமரத் தாலிழைத்த இல்லம்தான்! அவ்விடத்தே இனியுமணம் தனைப்பரப்பும் வண்ண நீர் ஊற்றுகளோ, வளம்மிகுந்த பொற்சரடோ, கண்கவரும் லஸ்தர்களே ஈ' காணவில்லை! மாறாகக் கருமைகொண்ட எளியதொரு முகட்டைத்தான் கண்டறிந்தேன்! இருந்தாலும் காலத்தின் இயற்கையினால் கறைப்பட்ட பொருள்களுக்கு மத்தியிலே தாகூரின் பேரிதயம் அருள் பரப்பி நின்றதையும் ஆங்கே நான் கண்டறிந்தேன்! எந்தவொரு புகழ்வண்ணச் சித்திரமும் இணை தில்லா விந்தையென ஆங்கிருந்த மேசைக்கும் மேலாக, :: கவிஞரவர் இயற்றியதோர் கவிதையொன்று சட்டமிட்டுப்