பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

"எங்கே போகலாம்? அதை உள்ளுர்க்காரர்களாகிய tங்களே சொல்லவேண்டும்' என்ருேம்.

வேறு காட்சிகளுக்குப் போக நேரமாகிவிட்டது, இசைக் கச்சேரியும் சரி; நாடகமும் சரி, நடனமும் சரி; இப்போது முடியும் தறுவாயில் இருக்கும். ஆகவே, ஆடல் பாடல்களுக்கு அகாலமாகிவிட்டது. உங்களுக்கு அலுப் பாக இல்லையென்ருல், நேரே ஒட்டலுக்குப் போவதற்குப் பதில், ஒரளவு மாஸ்கோவைச் சுற்றிக் காட்டிய பிறகு, ஒட்டலுக்குக் கொண்டு போய் விடட்டுமா?"

இப்படி வ்லாடிமீர் கேட்கவும் எங்களுக்கு பூரிப்பு. இரவில் மாஸ்கோவைக் காண விரும்பிளுேம். இசைக்தார் ல்லாடிமீர்.

மாஸ்கோ நகர நெடுஞ்சாலைகளின் மேல் பறந்து சென்றது. கார். தெருவெல்லாம் மின்னுெளி. போதிய வெளிச்சம் இல்லாத தெருவே காணுேம்.

அப்போது, இரவு பத்து மணிக்கு மேல், பனியோ கொட்டுகிறது. ஆயினும் மக்கள் நடமாட்டத்தைக் கண்டோம். மக்கள் அனைவரும், ஒழுங்காக, கடை பாதையின் மேல் சென்று கொண்டிருந்தார்கள். நடை பாதைகளில் நடக்க முடியாதபடி, தடைகளைக் கடைகளைக் கண்டு பழகியவன் நான்; நீங்களுமே. சோவியத் நாட்டின் ைேடபாதைகள், கடைகள் வைத்துக் கொள்ள அல்ல; மக்கள் நடப்பதற்கே; விரைந்து கடப்பதற்கே ; இடை பறின்றி, அவரவர் பாட்டில் கடப்பதற்கே.

சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்ருெரு பக்கத்திற் குப்போவோர். எப்படிக் கடந்து செல்கிருர்கள் என்பதை வழி நெடுகிலும் உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றேன். கண்டது என்ன? முன்னிரு முறை கண்டதே.