பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

வில்ல மைக்கேல். அவர்கள் மேல் சினந்து, கன் சிந்த&னயைச் சிதற அடிக்கவில்லை. ஒருமனப்பட்டு கற்ம் தால், சிறந்த மாணவகைத் தேறின்ை மைக்கேல். மேல் படிப்பிற்கு இடமும் பணவுதவியும் கிடைத்தன. முந்திய, ஆர்வத்தோடு கற்ருர். மளமளவென்று தேறினர். பல துறைகளிலும் தேறினர். அறிவியல் துறை மேதையாளுர், புகழ் பரவிற்று. பக்கத்து நாடுகளுக்கெல்லாம் பரவிற்று லொமனசோவின் புகழ்.

பெரும் புகழ், அவரைக் கெடுக்கவில்லை. விண் முட்டப் புகழ் பெற்றபோதும், மண்ணில் வாழும் மக்களை மறக்கவில்லை. ஏழை மக்கள் அறியாமைப் படுகுழியில் வீழ்ந்து கிடப்பதைப் பற்றி எண்ணினர், அதற்கு மாற்று காண விழைந்தார். முயற்சியில் முனைந்தார். அறிஞர்களேக் கலந்தார்; திட்டமிட்டார். அறிஞர்களின் துணையைப் பெற்றதோடு, அரசியல் ஆதரவையும் தேடினர். அதுவும் கிடைத்தது. அப்போதைய ஆட்சி பல்கலைக்கழகம் நிறுவுவதை ஆதரித்தது. மைக்கேல் லொமனசோவின் கனவு நனவாயிற்று. மாஸ்கோ பல்கலைக்கழகம் தோன்றிற்று.

ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தைந்தாம் ஆண்டில், அறிவியல் மேதை, மைக்கேல் லொமனசோவில்ை ஏற்படுத்தப்பட்டது மாஸ்கோ பல்கலைக்கழகம். அது தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. இன்று, உலகப் புகழ் பெற்ற, பெரிய பல்கலைக்கழகமாக விளங்குகிறது. அது முதலில் அமைக்கப்பட்டது, இப்போதுள்ள இடத்தில். அல்ல. தொடங்கியது மாஸ்கோ நகரின் நடுவில். அங்கே இடநெருக்கடி- ஏற்பட்டதால், லெனின் குன்றின் மேல்: இப்போதுள்ள மாஸ்கோ பல்கலைக் கழகம் கட்டப்

பட்டது.