பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

அக் கட்டடத்தின் உச்சியை அண்ணுந்து பார்த்தால், இம்,கழுத்து சுளுக்கிக் கொள்ளலாம். அவ்வளவு உயரம் அ து.சும்மாவா, முப்பத்திரண்டு மாடிக் கட்டடமாயிற்றே அது; ஆம், கட்டடத்தின் நடுப்பகுதி முப்பத்திரண்டு 'மாடிகளாக உயர்ந்துள்ளது. தோள்கள் இரண்டும், :பதினெட்டு மாடிகளாக கிற்கின்றன. வானளாவ உயர்ந் துள்ளதைப் போல், மாஸ்கோ பல்கலைக்கழகம் விரிந்து பரந்து உள்ளது. அது எவ்வளவு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது தெரியுமா?

மாஸ்கோ பல்கலைக் கழகத்தின் புதிய கட்டடம் - லெனின் குன்றின் மேல் உள்ள கட்டடம் நூற்று அறுபது ஹெக்டார் பரப்புள்ளது. ஹெக்டார் என்பது 2.471 ஏக்கர் கொண்டதாகும். அதாவது பல்கலைக்கழக பரப்பளவு ஏறத்தாழ நானூறு ஏக்கர்கள் ஆகும். நகரத்தின் நடுவே உள்ள கட்டடங்களும் பல்கலைக்கழகத் திேற்குத் தேவைப்படுகிறது.

பரந்து உயர்ந்துள்ள பல்கலைக்கழகத்தில் எத்தனே அறைகள் உள்ளன?

முந்திய முறை நாள் முழுவதும், பகல் நேரத்தில், மாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சுற்றிப் பார்த்த போது, மேற்படி கேள்வியைக் கேட்டு வைத்தேன்.

பதிலும் கேள்வியாக இருந்தது.

"ஒருவர். இக் கட்டடத்தில், ஒவ்வொரு அறையிலும் ஒரு நாள் தங்குவதென்று வைத்துக் கொண்டால் அத்தனை அறைகளிலும் தங்கிப் போக அறுபது ஆண்டு பிடிக்கும். இதைக் கொண்டு கணக்கிடுங்கள், உள்ள அறைகளே. இப் பதிலைக் கேட்டதும் மனக் கணக்கில் ஈடுபட்டேன்.