பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

உள்ளன : கணக்கில் அல்ல ; ஒட்டத்தில் உள்ளன. அந்த மோட்டார்கள்.

சோவியத் குடிமக்களுக்கு மட்டும், அல்ல, இத்தகைய ஏற்பாடு. வெளி நாட்டிலிருந்து வந்து நோய்வாய்ப் படுவோர்க்கும் அதே வசதி. வெளிநாட்டுப் பயணிக்கு நோய் வந்து விட்டால், அவர் தங்கியிருக்கும் ஒட்டல் கிர்வாகியே, பாலிளிெனிக்கிற்குத் தகவல் கொடுத்து மருத்துவரை வரவழைத்து விடுவார்.

எனக்கு மருத்துவரை அமுைக்க, நான் தங்கியிருந்த ஒட்டல் கிர்வாகியே ஏற்பாடு செய்தார்.

மருத்துவரும் உதவியாளரும் வந்து சேர்ந்தனர். இருவரும் பெண்மணிகள். இருவரையும், வ்லாடிமீர், என் அறைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவர், நாடியைப் பார்த்தார். இரத்த அழுத்தத் தைப் பார்த்தார். நெஞ்சில் கபம் உண்டா என்று பார்த் தார். உடலின் வெப்பத்தை சூடு காட்டியால் கணக்கிட் டார். காக்கின் அடியில் சூடுகாட்டியை வைத்துப் பார்ப்பது நம் வழக்கம். சோவியத் மருத்துவர்கள், அதை ஏற்றுக் கொள்ளுவதில்லே. அக்குளில் குடுகாட்டியை வைத்தே வெப்ப நிலையை அளக்கிருர்கள். அன்று என் வெப்பம் எவ்வளவு? நூற்று மூன்று டிகிரி.

என்னே கன் ருகச் சோதித்த பிறகு, தன் பெட்டியி, லிருந்து, மூன்று வகையான மருந்துகளே எடுத்துக் கொடுத் தார். அவற்றைப் பயன்படுத்தும் முறையையும் இடை. வெளியையும் வ்லாடிமீரிடம் கூறினர். பத்திய, உணவையும் குறிப்பிட்டுச் சொன் ஞர். ---

வ்லாடிமீர், தாதி வேலை செய்தார். மாத்திரைகளே. உரிய வேளைகளில் தவருமல் கொடுத்தார். பத்திய உணவைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.