பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|4

அழைத்துக் கொண்டு போய், பயிற்றுவித்தார்கள். அது போல, நாட்டிலேயே, உயர்ரக, தொழிற்பயிற்சிக்கும் கிலேயான உதவி செய்துள்ளார்கள். பம்பாயில், ஐ.ஐ.டி. நிறுவுவதற்கு உதவியது சோவியத் நாடாகும்.

- இவை காட்டுவன என்ன ? சோவியத் நாடு நமக்குப்

புதிய உறவல்ல ; ஏற்கனவே அறிமுகமான நாடு ::

கட்பான நாடு. வெறும் உணர்வால் மட்டுமல்ல, அந்: காட்டின் கட்பு நமக்குக் கிடைத்தது. உலக அரங்கு

களில், வலிமை மிக்க, தெளிவுடைய சொற்களால் நம்மிடமுள்ள கட்பைக் காட்டி வந்தது, சோவியத் நாடு. மேலும் நம் காட்டில், பெருக்தொழில் பெருக,

அப்போதைக்கப்போது உதவிய செயல்களின் மூலமும் இந்தியாவின்பால் உள்ள நட்பை உலகறியச் செய்து வ ங் த து. தொடர்ந்து, இடைவிடாது, நேசக்கரங், கொடுத்து வரும் நட்பு நாடோடுதான் நாம் உடன், படிக்கை செய்து கொண்டோம்.

இந்தோ சோவியத் உடன்படிக்கையின் சிறப்பையும் உயிராற்றலையும், பின் விளைவுகளையும் நம்மை விட அதிக மாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டார்கள் சோவியத் மக்கள். வியப்பும் திகைப்பும் தீர்ந்து, அவ்வுடன் படிக்கை பற்றி நாட்டு மக்களுக்கு காம் எடுத்துரைப் பதற்கு முன்பே, அவர்கள் அதை, சோவியத் காடு முழு வதும் விளக்கிச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். இரு அரசுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்படிக்கை அரசு களோடு நிற்கலாமா? ஆகாது. அரசுகளே ஆக்கும் உரிமை பெற்ற, அந்தந்த நாட்டுப் பொதுமக்களும் வாக் காளர்களும், உடன்படிக்கையில் ஈடுபட்டுவிட வேண்டும். உடன்படிக்கையின் உயிர்நாடியான கல்லுணர்ச்சியில், நட்புணர்ச்சியில் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.

தலைவர்களுக்கிடையே நட்பு ஏற்படுவது எளிது.” இரு நாடுகளிலுமுள்ள கோடி கோடி மக்களிடையே