பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

குட்பை வளர்ப்பது, எப்படி என்று மலைத்து கின்று விட வில்லை, சோவியத் அறிஞர்கள். இதை, காலத்தின் கருணைக்கு விட்டு விடுவோமென்றும் சோம்பவில்லை அவர்கள்.

இரு தரப்பிலும் கோடானு கோடி மக்களானல், என்ன? ஒவ்வொருவரும் மனம் உடையவரே. ஒவ்வொரு மனமும் மாறும் இயல்புடையதே. நட்பின் வழியில் ஒடும் இயல்புடையதே. கோடி கோடி உள்ளங்களையும் மாற்றி, நட்பின் வழியில், ஒத்துழைப்பின் வழியில், பெருநடை போடச் செய்து, அமைதியை உறுதிப்படுத்த லாம், என்பதில் அசையாத நம்பிக்கை உடையவர்கள் சோவியத் அறிஞர்கள். முயன்ருல் முடியுமென்பதை உணர்ந்த சோவியத் மக்கள், இரு நாட்டு மக்களிடை யேயும் பரவலான நட்புறவை வளர்க்க முடிவு செய்தனர். அதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்கள். வானெலிப் பேச்சுக்கள், நாளிதழ்கள். சஞ்சிகைகள், ஆகியவற்றில் வெளிவரும் விளக்கக் கட்டுரைகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டப் பேச்சுகள், ஆகியவை நட்புறவை வளர்க்கத் துணை செய்யும். இவை, குறிப்பிட்ட ஒரு பருவத்தில் பெய்தால், வெகு பலன் விளையும். நாள் தோறும் வீட்டைத் துப்புரவு செய்கிருேம் ; உண்மை. 'பொங்கல்' என்று வந்து விட்டால், செய்யும் துப்புரவோ, முழுமையானது. அப்போதைக்கப்போது, இந்திய சோவியத் நட்பைப் பற்றி விளக்குவதோடு, ஒர் குறிப் பிட்ட காலத்திற்கு, இதைப் பற்றியே எல்லா நடவடிக் கைகளும் நடந்தால், பலன் அதிகம் ஏற்படும்.

எனவே, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத் தோராம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் தொடங்கி ஒரு மாத காலம், சோவியத் இந்திய நட்புறவுத் திங்கள்' கொண்டாட முடிவு செய்தார்கள், சோவியத் மக்கள். இதை நாடு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டார்கள். சோவியத் காட்டில் கடக்கும் அங் நிகழ்ச்சிகளில் கலந்து