பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்டுரிஸ்ட் ஒட்டலில், தனி அறையொன்றில், எங்களுக்கு பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. எங்களைச் சேர்த்து ஆறு பேர் விருந்துண்டோம். அது பலமான விருந்து, பலவகைப் பண்டங்கள், உபசரிப்புக்கு ஈடு இணையில்லை.

முதலில் உஸ்பெக் தோழர்கள் விருந்தளித்தபோது, அந்த உபசரிப்புக்கு ஒப்பு இல்லையென்று உணர்ந்தோம். சென்றமுறை இந்தியது.ாதுக்குழு ஜார்ஜிய தோழர்களோடு தங்கியபோது, அவர்களது விருந்தோம்பலும் எங்களை திக்குமுக்காடச் செய்தது. உக்ரெய்ன் குடியரசுக்குச் சென்றபோது உக்ரெய்ன் அன்பர்களது கவனிப்பும் விருங் தும் இணையற்றிருந்தது. இம் முறை அஜெர்பெய்ஜான் மக்களின் விருந்தோம்பலை உணர்ந்து திகைத்தோம். விருந்தோம்பலில், குடியரசுக்குக் குடியரசு தலைதெறிக்கும் போட்டிபோல் எங்களுக்குத் தெரிந்தது. அவ்வளவு தாராளமாக உபசரித்தார்கள், எல்லோரும்.