பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

எண்ணிக்கையிலோ பெரிதல்ல. அதன் நிலப் பரப் கிட்டத்தட்ட எண்பத்தேழு ஆயிரம் சதுர கிலோ, மீட்டர்கள் ஆகும். இதற்குள் எட்டுவித, தட்பவெப்ப கிலேகள் உண்டு.

மக்கள் எண்ணிக்கை, நாற்பத்தாறு இலட்சமே. இதில் அஜெர்பெய்ஜான் இனத்தவர், நூற்றுக்கு எழுபது விழுக்காடு. இந்த நாற்பத்தாறு இலட்சம் மக்களில் பன்னிரண்டு இலட்சம் மக்கள், தலைநகராகிய பாக்குவில் உள்ளனர். சோவியத் நாட்டின் நான்காவது பெரிய நகரம் பாக்கு ஆகும். பாக்கு துறைமுகப்பட்டினமும் ஆகும். இது, காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து, கப்பல் போக்குவரத்து பெருமளவு உண்டு. ஆட்கள் போவதோடு, எண்ணெய், இரசாயனப் பொருள்கள் ஆகியவை கப்பல்களில் செல்கின்றன.

பாக்கு என்ற பெயருக்குப் பொருள் உண்டா? உண்டு. பாக்கு என்ருல் காற்றார் என்று பொருள் காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள அங் நகரத்தில் அதிகக் காற்று அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டு இப் பெயரை இட்டார்கள் போலும்.

இது தொன்மையான நகரம். இந் நகரத்தின் உட்பகுதி பழைய நகரம். அது கோட்டையூர். பழைய நகரத்தைச் சுற்றி மதில் சுவர் உள்ளது. அச் சுவரின் குறுக்களவு மூன்று மீட்டர்கள். அது எண்ணுாறு ஆண்டு. களுக்கு முன்பு கட்டப்பட்ட மதிலாம்.

பழைய நகரத் தெருக்கள் குறுகலானவை. இப்போது எல்லாத் தெருக்களுக்கும் தார் போட்டிருக்கிருர்கள்.

பழைய நகரத்தில் நிறைய மசூதிகள் உள்ளன: அவற்றின் எண்ணிக்கை எழுபது என்று கேள்விப் பட்டோம், நாங்கள் அவற்றில் மிகப் புகழ்பெற்ற பள்ளி