பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

நம் நிலை என்ன? ஒரு தமிழ் மன்னனை மற்ருோ தமிழ் மன்னன் வென்றதும், முந்தியவன் கட்டிய அனேத்தையும் அழிப்பதே முதல் வேலை. அவன் சிறப்பாகச் செய்து புகழ், தேடிக் கொண்ட அனைத்தையும் தடம் தெரியாமல்

இருட்டடிப்பு செய்வதிலேயே முனைப்பு. 'தமிழ் மக்களின் சிறப்புக்குச் சான்றுகளாக விளங்கட்டுமே என்று விட்டு. வைத்த பெரிய மனம் உடையவர்களைக் காண்பது அருமை.

கோயில்களை மட்டும் விட்டு வைத்திருக்கிருர்களே. தன்னல் வெல்லப்பட்டவன் கட்டியது என்பதற்காக அதனை அழிக்கவில்லையே? இந்த ஐயம் எழுகிறதா? இறைவன் இல்லத்தில் கைவைத்தால் பொல்லாதது நேரிடும் என்று அஞ்சியோ, அல்லது மக்கள் கொதிப்பின சமாளிக்க முடியாதென்று கருதி, முன்னவர் புகழ்பாட, விட்டு வைத்தார்கள் போலும்.

எது எப்படியிருப்பினும், நாம் நம் பொருமைக் காய்ச்சலைக் க ட் டு ப் ப டு த் த க் கற்றுக் கொள்ள வேண்டும். வரலாற்று நாயகர்களின் சாதனைகளுக்கு உரிய சிறப்பினைத் தரவேண்டும். அதைவிட உயர்ந்த சாதனைகளின் மூலம் நமக்கும் இடம் தேடிக் கொள்ள வேண்டுமே ஒழிய, முன்னேர் சாதனைகளே அழித்தோ, மூடிமறைத்தோ, நாம் ஒளிவிட கினேப்பது, ஞாயிறுகளாக விளங்கவேண்டிய நம் இனத்தை, விண்மீன் களாகவே வைத் திருக்கும். தமிழர் சிறப்புச் சின்னமில்லாத சின்னவர்களாகவே காட்சியளிப்பர். #

அரண்மனையைச் சுற்றிப் பார்த்தபின், அங்குள்ள காட்சிக் காப்பாளரைப் பேட்டி கண்டோம். அவர் கலகலப்பாகப் பேசினர். பாக்கு நகரில் உள்ள தொன்மை அடையாளங்களை யெல்லாம் கண்டு தெரிந்துகொள்ள பல நாள் வேண்டும். எவ்வளவு வேலையிருந்தாலும்,